மகாராட்டிரா மாநிலத்தின் பர்பணி மாவட்டத்தில் உள்ள கங்காகேத் எனும் ஊரில் பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் ஜனாபாய்.
ஜனாபாயின் சிறுவயதில் தம் தாயார் இறந்த பிறகு, தந்தையால் பண்டரிபுரம் அழைத்துச் செல்லப்பட்டு, நாமதேவரின் தந்தை வீட்டில் வீட்டு வேலைகள செய்யத் துவங்கினார். ஜனாபாய் நாமதேவரை விட வயதில் சில ஆண்டுகளே மூத்தவர். நாமதேவரைப் போன்றே ஜனாபாயும், பகவான் விட்டலர் மீது பெரும் பக்தி கொண்டு பதிகங்கங்கள் இயற்றினார்.