சக்குபாய் (பண்டரிபுரம்)

சக்குபாய் (Sakkubai), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள பகவான் பாண்டுரங்க விட்டலரின் பரம பக்தை ஆவார். பண்டரிபுரம் அருகே சிஞ்சுருணிபுரம் எனும் கிராமத்தில், கங்காதர ராவ் - கமலாபாய் தம்பதியருக்கு சக்குபாய் பிறந்தார். சிறுவயது முதலே கிருட்டிணராகிய பாண்டுரங்க விட்டலரின் மீது அதிக பக்தி கொண்டிருந்தார். மணந்தால் பகவான் பாண்டுரெங்கனை மட்டுமே மணப்பேன் என உறுதி பூண்டிருந்த சக்குபாய்க்கு, அவரின் 10-வது வயதில் மித்துரு ராவ் என்பவருக்கு, அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

மித்துரு ராவுடன் வெளியூரில் வாழ்ந்த சக்குபாய், ஒரு நாள் பண்டரிபுரம் யாத்திரை செல்லும் அடியார்களுடன் பண்டரிபுரம் செல்ல கணவரிடம் அனுமதி கேட்டார். அதனை மறுத்த கணவர் மித்ரு ராவ், சக்குபாயை ஒரு தூணில் கயிற்றால் கட்டிப் போட்டார். இதனை அறிந்த பகவான் விட்டலர் சக்குபாயை கட்டப்பட்ட கயிற்றிலிருந்து விடுவித்தார். சக்குபாய் உடனே அடியவர்களுடன் பண்டரிபுரம் யாத்திரையில் கலந்து கொண்டு, பண்டரிநாதனை வழிபட பண்டரிபுரம் சென்றார்.

பண்டரிபுரத்தில் விட்டலரை வழிப்பட்டு ஊருக்கு திரும்பிய சக்குபாய், அங்கு வீட்டில் தனக்கு பதிலாக பகவான் பாண்டுரங்க விட்டலர் தனது வேடத்தில் வீட்டு வேலைகளை செய்வதை அறிந்து திகைத்தார். சக்குபாயின் மாமியார் மற்றும் கணவருக்கு பகவான் நேரில் காட்சியளித்து, சக்குபாயின் பக்தியை பாராட்டும் விதமாக தான் சக்குபாய் வேடத்தில் வீட்டு வேலைகளை செய்ததாக அருளினார்.

திரைப்படங்களில்

சக்குபாய் தொடர்பான கதைகள் இரண்டு தமிழ்த் திரைப்படகள் மூலம் வெளியாகியுள்ளது. முதல் திரைப்படம் 1934- சக்குபாய்[1] என்ற பெயரில் வெளியானது. இரண்டாவது திரைப்படம் 1939-இல் சாந்த சக்குபாய்[2] எனும் பெயரில் வெளியானது.

மேற்கோள்கள்

  1. சக்குபாய்
  2. Santha Sakkubai - Tamil Movie

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!