பண்டரிபுரம் யாத்திரை (Pandharpur Wari or Wari) இந்தியாவின் மகாராட்டிராமாநிலம்சோலாப்பூர் மாவட்டம், பண்டரிபுரம் நகரத்தில் குடிகொண்டுள்ள பாண்டுரங்க விட்டலரின் பக்தர்கள துளசி மணி மாலைகள் அணிந்து, ஆண்டுக்கு ஒரு முறை வைணவ சாதுக்களான ஞானேஸ்வர் மற்றும் துக்காராம் ஆகியோரின் சமாதிகள் உள்ள புனே நகரத்திற்கு அருகில் உள்ள ஆளந்தி மற்றும் தேகு பகுதிகளிலிருந்து அவர்களது பாதுகைகளை தனித்தனி பல்லக்குகளில் வைத்து, பல்லக்கை மாட்டு வண்டிகளில் ஏற்றி வர்க்காரி மரபுப்படி யாத்திரையாக செல்வர்.