அபங்க் அல்லது அபங்கம் (மராத்தி: अभंग) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பண்டரிபுரம் நகரத்தில் விட்டலர் கோயிலில் குடிகொண்டுள்ள பகவான் கிருஷ்ணர் என்ற விட்டலரைப் போற்றி ஞானேஷ்வர், ஏகநாதர், நாமதேவர், ஜனாபாய், சோகாமேளர், துக்காராம், புரந்தரதாசர் போன்ற வைணவ சமய வர்க்காரி நெறியில் வாழ்ந்த சாதுக்கள் மராத்தி மொழியில் பாடிய பஜனைப் பாடல்கள் ஆகும். அபங்கம் என்ற மராத்திய மொழிச் சொல்லிற்கு இடையீடு அற்ற பஜனைப் பாடல்கள் என்று பொருளாகும்.[1] இந்த அபங்கங்கள் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் கார்த்திகை மாத ஏகாதசி அன்று, மகாராட்டிரா, வட கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநில வர்க்காரி நெறியைப் பின்பற்றும் விட்டலரின் பக்தர்கள் பண்டரிபுரம் விட்டலர் கோயிலிலுக்கு புனித யாத்திரையின் போது தம்புராவை இசைத்துக் கொண்டே, அபங்கம் எனும் பஜனைப் பாடல்களை பாடிக் கொண்டுச் செல்வது வழக்கம். [2][3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்