நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி (Nagapattinam Lok Sabha constituency), தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 29வது தொகுதி ஆகும். ஆரம்ப காலத்தில் இந்தத் தொகுதி இரண்டு உறுப்பினர் கொண்ட தொகுதியாக இருந்தது, பின்பு ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாற்றம் பெற்றது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
நாகை மக்களவைத் தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூர் (தனி), நன்னிலம் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, தஞ்சை பாராளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு, நாகப்பட்டினம் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
நாகை பாராளுமன்றத் தொகுதியில், இதுவரை காங்கிரஸ் 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 7 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்:
இத்தேர்தலில், 8 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் ம. செல்வராசு, அதிமுக வேட்பாளரான, சரவணனை 2,09,349 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
7 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் ஏ. கே. எஸ். விஜயன், இந்திய பொதுவுடமைக் கட்சியின் எம். செல்வராசை, 47,962 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
{{cite web}}
|archive-date=
|accessdate=