கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி (Kanniyakumari Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 39வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.
சட்டமன்ற தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
- கன்னியாகுமரி
- நாகர்கோவில்
- குளச்சல்
- பத்மநாபபுரம்
- விளவங்கோடு
- கிள்ளியூர்
இடைத்தேர்தல், 2021
2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இத்தொகுதியின் உறுப்பினர் எச். வசந்தகுமார் 28 ஆகத்து 2020 அன்று இறந்ததால், இத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. எனவே இத்தொகுதிக்கு புதிய மக்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.[2][3]பொன். இராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[4][5][6]
தேர்தல் முடிவுகள்
காங்கிரசு கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் விட 1,34,374 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[7]
வென்றவர்கள்
திமுக
பா.ஜ.க காங்கிரசு
வாக்காளர்களின் எண்ணிக்கை
தேர்தல்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்கள்
|
மொத்தம்
|
ஆதாரம்
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
7,39,328
|
7,23,044
|
70
|
14,62,442
|
2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[8]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
7,45,626
|
7,31,387
|
148
|
14,77,161
|
2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1]
|
18வது மக்களவைத் தேர்தல் (2024)
17வது மக்களவைத் தேர்தல் (2019)
இத்தேர்தலில் காங்கிரசு கட்சியை சேர்ந்த எச். வசந்தகுமார், பாஜக வேட்பாளரான, பொன். இராதாகிருஷ்ணனை, 2,59,933 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண்
|
பெண்
|
இதர பிரிவினர்
|
மொத்தம்
|
வாக்களித்தோர்
|
%
|
|
|
|
|
|
|
வாக்குப்பதிவு
2014 வாக்குப்பதிவு சதவீதம் [8]
|
2019 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
|
|
↑ %
|
16வது மக்களவைத் தேர்தல் (2014)
வேட்பாளர்
|
கட்சி
|
பெற்ற வாக்குகள்
|
பொன். இராதாகிருஷ்ணன்
|
பாஜக
|
3,72,906
|
எச். வசந்தகுமார்
|
காங்கிரசு
|
2,44,244
|
டி. ஜான்தங்கம்
|
அதிமுக
|
1,76,239
|
எப். எம். இராஜரத்தினம்
|
திமுக
|
1,17,933
|
ஏ. வி. பெல்லார்மின்
|
சிபிஎம்
|
35,284
|
சு. ப. உதயகுமார்
|
எளிய மக்கள் கட்சி
|
15,314
|
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[9]
|
2014 வாக்குப்பதிவு சதவீதம் [8]
|
வித்தியாசம்
|
64.99%
|
67.69%
|
↑ 2.70%
|
15வது மக்களவைத் தேர்தல் (2009)
22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின், ஹெலன் டேவிட்சன், பாரதிய ஜனதா கட்சியின் பொன். இராதாகிருஷ்ணனை, 65,687 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்