மதுரை மக்களவைத் தொகுதி (Madurai Lok Sabha constituency), என்பது தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 32-ஆவது தொகுதி ஆகும்.
தொகுதி மறு சீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பின் கீழ், மதுரை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு, மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியது. திருப்பரங்குன்றம், விருதுநகர் மக்களவைத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.
சட்டமன்றத் தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
- மேலூர்
- மதுரை கிழக்கு
- மதுரை வடக்கு
- மதுரை தெற்கு
- மதுரை மத்தி
- மதுரை மேற்கு
இதுவரை மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள்
இத்தொகுதியில் காங்கிரசு கட்சி 8 முறையும், சிபிஎம் 3 முறையும், சிபிஐ, திமுக மற்றும் அதிமுக தலா ஒரு முறையும் வென்றுள்ளன.
இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களும் அவர்களது கட்சியும் -
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண்
|
பெண்
|
இதர பிரிவினர்
|
மொத்தம்
|
வாக்களித்தோர்
|
%
|
|
|
|
|
10,16,026[2]
|
|
முக்கிய வேட்பாளர்கள்
இத்தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 20 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன், அதிமுக வேட்பாளரான, வி. வி. ஆர். இராஜ் சத்யனை, 1,39,395 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
16-ஆவது மக்களவைத் தேர்தல்
முக்கிய வேட்பாளர்கள்
பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை இந்தத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.[3] இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் இவர்.
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[4]
|
2014 வாக்குப்பதிவு சதவீதம் [5]
|
வித்தியாசம்
|
77.48%
|
67.88%
|
↓ 9.60%
|
15-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
12 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் மு. க. அழகிரி, சிபிஎம்மின், மோகனை, 1,40,985 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
14-ஆவது மக்களவை தேர்தல் முடிவு
பொ. மோகன் - சிபிஎம் - 4,14,433
ஏ. கே. போசு - அதிமுக - 2,81,593
வெற்றி வேறுபாடு 1,32,840 வாக்குகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்