பகுஜன் சமாஜ் கட்சி (பகுசன் சமாச் கட்சி) ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது கான்ஷிராம் என்பவரால் ஏப்ரல் 1984இல் தோற்றுவிக்கப்பட்டது. இது தலித்துகள் எனப்படும் தாழ்த்தப்பட்டோரை பிரதிநிதிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இதன் சின்னம் யானை. 2001இல் கன்ஷிராம் தன்னுடைய அரசியல் வாரிசாக மாயாவதியை அறிவித்தார்.
13ஆவது மக்களவையில் (1999-2004) இதற்கு 14 இடங்கள் கிடைத்தது. 14வது மக்களவையில் 19 இடங்களை இக்கட்சி பெற்றது. இதன் தலைவராக மாயாவதி உள்ளார். இவர் உத்திர பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். இக்கட்சி மற்ற மாநிலங்களை விட உத்தரப் பிரதேசத்தில் பலமாக உள்ளது.
மக்களவைத் தேர்தல்
தமிழகம்
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றுள்ளது. கு. செல்வப்பெருந்தகை இக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார். பின்னர் 2012 முதல் 2024 வரை கி. ஆம்ஸ்ட்ராங் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.[4] 2024 முதல் ஆனந்தன் இதன் மாநிலத் தலைவராகவுள்ளார்.
மேற்கோள்கள்