மாயாவதி நைனா குமாரி (இந்தி: मायावती) ஒரு இந்தியஅரசியல்வாதியும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2008இல்ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மாயாவதியின் பெயரும் இடம் பெற்றது.
மாயாவதி இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் பிறந்து வளர்ந்தவர். 1956-ம் வருடம் சனவரி 15 அன்று இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை ஒரு அஞ்சல் அலுவலக ஊழியர். தமது அன்னையின் அரவணைப்பால் கலை மற்றும் கல்வியில் இளங்கலை பட்டப்படிப்புகளைப் பயின்றார். பின்னாளில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.