அப்னா தளம் (சோனேலால்) (Apna Dal (Sonelal)) என்பது உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அரசியல் கட்சியாகும். உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் குறிப்பாக வாரணாசி, மிர்சாபூர் பகுதியில் இது அதிக செல்வாக்குடன் உள்ளது. இதன் உறுப்பினர் அனுப்பிரியா பட்டேல் இந்திய மக்களவை உறுப்பினராக உள்ளார். மோதி தலைமையிலான பாசக அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சராக உள்ளார்.
இது 1995 ஆம் ஆண்டு உருவான அப்னா தளம் என்ற கட்சியிலிருந்து பிரிந்த கட்சியாகும்.[1] இக்கட்சியை 2016 டிசம்பர் 14 அன்று சவகர் லால் பட்டேல் உருவாக்கினார் [2]. அனுப்பிரியா பட்டேல் மிர்சாபூர் தொகுதி உறுப்பினராக உள்ளார்.