சப்பான் பரிசு (2001) என்ரிக்கோ பெர்மி விருது (2009) அறிவியலுக்கான தேசிய விருது (2011) ஐஇஇஇ விருது(2012) சார்லசு இசுட்டார்க் திரேப்பர் பரிசு (2014) வெல்ச் விருது (2017) கோப்லி பதக்கம் (2019) வேதியியலுக்கான நோபல் பரிசு(2019)
2014 இல் இவர் இலித்தியம்-மின்மவணு மின்கல வளர்ச்சிகளுக்காக செய்த ஆய்வுகளுக்காக திரேப்பர் பரிசு பெற்றார்.[3]
இளமை வாழ்க்கையும் கல்வியும்
கூடினஃபு இடாய்ச்சுலாந்தில் இயேனா (Jena) என்னும் ஊரில் தந்தையார் எர்வின் இராம்சிடல் கூடினஃபு ((1893-1965) அவர்களுக்கும் தாய் எலென் மெரியம் கூடினஃபு அவர்களுக்கும் பிறந்தார். இவர் பிறக்கும் காலத்தில் இவரின் தந்தையார் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் கடவுட்தன்மையியல் கல்லூரியில் முனைவர்ப்பட்டத்துக்குப் படித்துக்கொண்டிருந்தார். இவரின் தந்தையார் பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில் சமய வரலாற்றுத் துறாய்யில் பேராசிரியராக இருந்தார். இவரின் அண்ணன் மறைந்த வார்டு கூடினஃபு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மாந்தவியலாய்வாளராக இருந்தார். இவரும் இவரின் அண்ணனும் மாசாச்சுசெட்சில் உள்ள குரோட்டன் என்னும் இடத்தில் உள்ள தங்கிப்படிக்கும் தனியார் பள்ளியான குரோட்டன் பள்ளியில் படித்தனர்[4]. சான் கூடினஃபு 1944 இல் யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டத்தைப் பெற்றார்[5] அதன் பின்னர் இரண்டாவது உலகப்போரின் பொழுது அமெரிக்கப் படைத்துறையில் விண்கல் ஆய்வாளராக இருந்தார்[6]. அதன் பின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் கிளரன்சு சீனர் ஆய்வு நெறியாள்கையில் 1952 ஆண்டு இயற்பியல் துறையில் முனைவர்ப்பட்டம் பெற்றார்
மேற்கோள்கள்
↑Thackeray, M. M.; William I. F. David; Bruce, P. G.; Goodenough, J. B. (1983). "Lithium insertion into manganese spinels". Materials Research Bulletin18 (4): 461–472. doi:10.1016/0025-5408(83)90138-1.