ஓட்டோ ஹான், OBEOBE, ForMemRSForMemRS[1] (8 மார்ச்சு 1879 – 28 சூலை 1968) ஒரு ஜெர்மானிய வேதியலாளரும் கதிரியக்கம் மற்றும் கதிரியக்க வேதியியல் துறைகளின் முன்னோடியும் ஆவார். அணுக்களின் மையப்பிளவும் அதனால் வெளிப்படும் ஆற்றல்களும் தொடர்பான ஆய்வுக்காக அவருக்கு 1944 ஆம் ஆண்டிற்காக வேதியியலுக்கான நோபல்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அவரை கதிரியக்க வேதியியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.[2]