வில்லியம் நன் லிப்ஸ்காம்ப் ஜூனியர் (William Lipscomb டிசம்பர் 9, 1919 – ஏப்ரல் 14, 2011) [1] நோபல் பரிசு பெற்ற அமெரிக்ககனிம மற்றும் கரிம வேதியியலாளர் ஆவார்.அணு காந்த அதிர்வு, கோட்பாட்டு வேதியியல், போரான் வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகியவற்றில் இவர் பணியாற்றினார் .
லிப்ஸ்காம்ப் ,மேரி அடீல் சார்ஜெண்டை 1944 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இந்தத் தம்பதியினர் 1983 ஆம் ஆண்டு வரை இணைந்திருந்தனர். [3] அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். அவர்களில் ஒரு குழந்தை சில மணிநேரங்கள் மட்டுமே இயுரி பிழைத்திருந்தார். பின்னர் அவர் 1983 இல் ஜீன் எவன்ஸ் என்பவரை மணந்தார். [4] அவர்களுக்கு ஒரு வளர்ப்பு மகள் இருந்தார்.
லிப்ஸ்காம்பின் உயர்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியரான ஃபிரடெரிக் ஜோன்ஸ், லிப்ஸ்காம்பிற்கு கரிம வேதியல், பகுப்பாய்வு வேதியல் மற்றும் பொது வேதியியல் குறித்த தனது கல்லூரி புத்தகங்களை இவருக்கு வழங்கினார். வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவர் சோடியம் ஃபார்மேட்டு (அல்லது சோடியம் ஆக்சலேட் ) மற்றும் சோடியம் ஐதாராக்சைடு ஆகியவற்றிலிருந்துநீரியத்தினைத் தயாரித்தல் போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் . [5] வாயு பகுப்பாய்வுகளைச் சேர்த்தல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
லிப்ஸ்காம்ப் தனது உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் பிரிவில் படித்தார்.மாநில அளவில் இந்தப் பாடப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இவர் முதலிடம் பெற்றார். அவர் சிறப்புச் சார்புக் கோட்ட்பாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
லிப்ஸ்காம்ப் கால்டெக்கில் பட்டம் பயின்றார். இது அவருக்கு இயற்பியலில் கற்பித்தல் உதவிகளை மேற்கொள்வதற்காக அவருக்கு மாதம் 20 அமெரிக்க டாலர்களை உதவித் தொகையாக வழங்கியது. வடமேற்கு பல்கலைக்கழகம் இவருக்கு ஆராய்ச்சி செய்வதற்காக மாதம் 150 அமெரிக்க டாலர்களை ஊக்கத் தொகையாக வழங்கியது. ஆனால் இதனைப் பெற இவர் மறுத்துவிட்டார். கொலம்பியா பல்கலைக்கழகம் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் அரால்டு இயூரி எழுதிய கடிதத்தில் லிப்ஸ்காம்பின் விண்ணப்பத்தை நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
↑Collin, R. L.; Lipscomb, W. N. (1951). "The Crystal Structure of Hydrazine". Acta Crystallogr. 4: 10–14. doi:10.1107/s0365110x51000027.
↑Dulmage, W. J.; Meyers, E. A.; Lipscomb, W. N. (1951). "The Molecular and Crystal Structure of Nitric Oxide Dimer". J. Chem. Phys. 19 (11): 1432. Bibcode:1951JChPh..19.1432D. doi:10.1063/1.1748094.
↑Enemark, J. H.; Lipscomb, W. N. (1965). "Molecular Structure of the Dimer of Bis(cis-1,2-bis(trifluoromethyl)-ethylene-1,2-dithiolate)cobalt". Inorg. Chem. 4 (12): 1729–1734. doi:10.1021/ic50034a012.
↑Steitz, T. A.; Lipscomb, W. N. (1965). "Molecular Structure of Methyl Ethylene Phosphate". J. Am. Chem. Soc. 87 (11): 2488–2489. doi:10.1021/ja01089a031.