இளங்கலை அறிவியல் ( இலத்தீன் Baccalaureus Scientiae , பி.எஸ் அல்லது பி.எஸ்.சி ; அல்லது அதற்கு குறைவாகப் பொதுவாக, எஸ்.பி., அல்லது Sc.B., Scientiae Baccalaureus என்பதற்கு இணையாக) [1] என்பது பொதுவாக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை படித்து பட்டம் பெற்ற ஒரு நபருக்கு வழங்கப்படும் இளங்கலை கல்வி பட்டம் ஆகும்.[2] இந்தப் பட்டம் பெறுபவர்கள் அறிவியல் இளையர் எனப்படுகிறார்கள்.
இந்தப் பெயரிலான படிப்புக்கு முதன்முதலில் மாணவர் சேர்க்கையை 1860 ஆம் ஆண்டு நடத்தியது லண்டன் பல்கலைக்கழகம் ஆகும் .[3] அதற்கு முன்பு, அறிவியல் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டத்தில் பி.ஏ. வுக்கு பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் உரிய சொற்கள் சேர்க்கப்பட்டன. குறிப்பாக கணிதம், இயற்பியல், உடலியல், தாவரவியல் போன்றவை.
இந்தியா
இந்தியாவில், இது பொதுவாக மூன்று ஆண்டு படிப்பாகாக உள்ளது. இருப்பினும், சில இடங்களில், இது மற்ற குறுகிய கால பாடங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, நான்கு ஆண்டு படிப்பாகவும் வழங்கப்படுகிறது.[4] . அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் (மத்திய வாரியம் அல்லது மாநில வாரியம்) 12 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர் இளம் அறிவியல் படிக்க கல்லூரியில் விண்ணப்பிக்கலாம். இது இளங்கலை பட்டமாக, வருடாந்திர தேர்வு முறையில் (3 ஆண்டுகள்) அல்லது செமஸ்டர் முறை (6 செமஸ்டர் தேர்வுகளாக நடத்தப்படுகிறது. செமஸ்டரானது பொதுவாக சூலை / ஆகத்து முதல் திசம்பர் வரை நீடிக்கும், மேலும் அடுத்த செமஸ்டரானது சனவரி முதல் மே வரை நீடிக்கும்). இந்தியாவின் அனைத்து முக்கிய கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இந்த பாடத்திட்டத்தை வழங்குகின்றன.[5] பி.எஸ்சி. பட்டம் பெற்ற, மாணவர்கள் அதற்குப் பின்னர் தங்கள் முதுநிலைக் கல்வியைத் தொடரலாம். அல்லது கல்லூரியை விட்டு வெளியேறி பணிக்கு சேரலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
[1]