எமானுவேல் மாரி சார்ப்பெந்தியே (Emmanuelle Marie Charpentier, பிறப்பு: 11 திசம்பர் 1968) பிரான்சிய பேராசிரியரும் ஆய்வாளரும் ஆவார். இவர் நுண்ணுயிரியியல், மரபணுவியல், உயிர்வேதியியல் துறைகளில் ஆய்வு செய்பவர்[1]. இவர் 2020 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பேராசிரியர் செனிபர் தௌதுனா அவர்களுடன் சேர்ந்து மரபணுத்தொகுதியை துல்லியமாக நறுக்கிப்பிணைக்கும் கிரிசிப்பர் (CRISPR/Cas9) நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக வென்றார்[2]. 2015 முதல் இடாய்ச்சுலாந்தில் பெரிலினில் உள்ள மாக்சு பிளாங்கு கழகத்தின் தொற்று உயிரியல் துறையின் இயக்குனராக உள்ளார். 2018 இல் இவர் நோயூட்டிகள் பற்றிய அறிவியலுக்கான தனித்தியங்கும் ஆய்வுக் கழகம் ஒன்றை மாக்சு பிளாங்கு கழகத்தில் உருவாக்கினார்.[3]
கல்வி
பிரான்சில் 1968 ஆம் ஆண்டு இழுவிசி-சூர்-ஓர்கே (Juvisy-sur-Orge) என்னும் ஊரில், பியேர்-மாரி பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியியல், மரபணுவியல், உயிர்வேதியியல் ஆகியவற்றைப் பற்றிய கல்வியை சார்ப்பெந்தியே பெற்றார் [4] இவர் இலூயி பாசுச்சர் கழகத்தில் 1992 முதல் 1995 வரை மேற்பட்டப்படிப்பு மாணவராக இருந்தார். அஙே ஆய்வுப்பத்தம் பெற்றார். இவருடைய முனைவர்ப்பட்ட ஆய்வுரையில் நுண்ணுயிரி எதிர்ப்பை எதிர்க்கும் வினையில் மூலக்கூற்றியிய செயற்பாடுகளைப் பற்றி ஆய்வுகளைப் பதிவு செய்திருந்தார். [5]
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
↑ 1.01.1Abbott, Alison (2016). "The quiet revolutionary: How the co-discovery of CRISPR explosively changed Emmanuelle Charpentier's life". Nature532 (7600): 432–434. doi:10.1038/532432a. பப்மெட்:27121823. Bibcode: 2016Natur.532..432A.