குர்த் வியூத்ரிச் (Kurt Wüthrich, பி: அக்டோபர் 4, 1938) ஒரு சுவிஸ் வேதியியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர். இவர் சுவிச்சர்லாந்து உள்ள ஆர்பெர்க் என்னுமிடத்தில் பிறந்தார்[1]. பெர்ன் பல்கலைக்கழகத்தின் வேதியியல், இயற்பியல், மற்றும் கணித துறையில் பயின்றார். பின்னர் 1964 ல் பாசெல் பல்கலைக்கழகத்தில் சில்வியோ ஃபால்லாப் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். 2002 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்[2].
மேற்கோள்கள்
↑""2014. Web. 19 Jul 2015"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
↑""Kurt Wüthrich - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)