விலங்கு உரிமைகளுக்கான ஐக்கிய செயற்பாட்டாளர்கள் (United Activists for Animal Rights) என்பது அமெரிக்காவின்கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கும் ஒரு விலங்குரிமைக் குழுவாகும். இதன் தலைவர் நான்சி பர்னெட்டு என்பவராவார். 1987 ஆம் ஆண்டு இவ்வமைப்பு நிறுவப்பட்டது.[1]
விலங்குரிமைகளுக்கான ஐக்கிய செயற்பாட்டாளர்கள் அமைப்பை தொலைக்காட்சி ஆளுமையான பாப் பார்கர் ஆதரிக்கிறார்.[2][3] மேலும் இக்குழு பார்கருடன் சேர்ந்து பல ஊடகத் திட்டங்களில் விலங்கு வன்கொடுமை பற்றிய அவர்களின் கண்டுபிடிப்புகளின் தொகுதியை திட்டம்-எக்சு என்ற பெயரில் அம்பலப்படுத்தியது.[4]
விலங்குரிமைகளுக்கான ஐக்கிய செயற்பாட்டாளர்கள் பர்னெட்டு மற்றும் பாப் பார்கர் மீது அமெரிக்க மனிதநேய சங்கம் 1989 ஆம் ஆண்டில் அவதூறு மற்றும் தனியுரிமையை ஆக்கிரமித்ததற்காக வழக்கு தொடர்ந்தது.[5] இச்சிக்கல் இறுதியாக காப்பீட்டாளரால் தீர்க்கப்பட்டது.
பார்கர், சீ செப்பர்டு பாதுகாப்பு சங்கம் உட்பட பிற விலங்குரிமை குழுக்களுக்கும் நிதியுதவி அளித்துள்ளார். இவர் தன் புதிய கப்பலான பாப் பார்கர் என்ற கப்பலில் விலங்கு உரிமைகளுக்கான ஐக்கிய செயற்பாட்டாளர்கள் அமைப்பின் தலைவர் நான்சி பர்னெட்டின் பெயரிடப்பட்ட உலங்கு வானூர்தியை கொண்டு செல்கிறார்.[6]