செண்டியன்ஸ் பாலிடிக்ஸ் (ஆங்கில மொழி: Sentience Politics), அல்லது உணர்திற அரசியல், என்பது மனிதரல்லாத விலங்குகளின் துன்பத்தைக் குறைக்கும் நோக்கோடு தொடங்கப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு விலங்கினவாத எதிர்ப்பு அரசியல் அமைப்பாகும்.[2] 2013-இல் நிறுவப்பட்ட இவ்வமைப்பின்[3] செயல்பாடுகளில் நிலையான உணவுக்கான வாக்கெடுப்பு முன்முயற்சிகள்,[4][5]முதனி வகை விலங்குகளுக்கான அடிப்படை உரிமைகள்,[6]தொழிற்முறை விலங்குப்பண்ணை (factory farming) மீதான தடை[7] உள்ளிட்ட அரசியல் பிரச்சாரங்கள் அடங்கும்.
வரலாறு
எஃபெக்டிவ் ஆல்ட்ரூயிசம் அறக்கட்டளையின் ஒரு திட்டமாக செண்டியன்ஸ் பாலிடிக்ஸ் அமைப்பு நிறுவப்பட்டது. இவ்வறக்கட்டளையின் மற்ற திட்டங்களில் "ரைசிங் பார் இபெக்டிவ் கிவிங்" மற்றும் அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் ஆகியவை அடங்கும்.[8] இத்திட்டத்தின் நோக்கமானது உணர்திற உயிர்களான மனிதன் மற்றும் மனிதரல்லா விலங்குகளின் துன்பங்களை திறம்படக் குறைப்பது குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதாகும்.[9] இப்பணியைத் தற்போது 2017-ல் நிறுவப்பட்ட செண்டியன்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற தனி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் அரசியல் முன்னெடுப்புகளை மட்டும் செண்டியன்ஸ் பாலிடிக்ஸ் அமைப்பு தொடர்ந்து கவனித்து வருகிறது.[10]
செண்டியன்ஸ் பாலிடிக்ஸ் 2017 முதல் ஒரு சுதந்திர சுவிஸ் சங்கமாகச் செயல்பட்டு வருகிறது.[11]
↑"Who we are". Sentience (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
↑www.sentience.ch, Sentience Politics, Basel. "Who we are". Sentience (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
↑Sentience Politics. "About Us". பார்க்கப்பட்ட நாள் November 20, 2016.