கோழி வளர்ப்பு

கோழி வளர்ப்பு கோழிகளை பல்வேறு தேவைகள் கருதி வளர்க்கும் தொழிற்துறையாகும். கோழிகள் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோழிகளைச் செல்லப்பிராணியாக வளர்க்கும் போக்கும் தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. சிறிய அளவில் குடிசைக் கைத்தொழில் முதல் மிகப் பெரும் பண்ணைகள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. பாரிய பண்ணை முறை கோழிவளர்ப்பானது பறவைக் காய்ச்சல் நோய் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.

வரலாறு

இந்தியா, மியன்மார், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் சிவப்புக் காட்டுக் கோழியே (Gallus gallus) இன்றைய வீட்டுக் கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகளின் மூலமாகக் கருதப்படுகிறது. இக்கோழிகள் முதலாவதாக தென்கிழக்காசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் முதலாவதாக வளர்க்கப்பட்டதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.[1] சிந்து வெளி நாகரிகத்தில் மொகாஞ்சிதாரோ அரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 அளவில் கோழிகள் இருந்தமையை சுட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மட்தகடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.[2] இக்கோழிவளர்ப்பு பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் பரவியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

வளர்ப்பு முறைகள்

கோழியானது பண்ணை மூலமாகவும் பண்ணை இல்லாமலும் (கட்டற்ற கோழி வளர்ப்பு) வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காகப் பயன்படுகிறது.

கட்டற்ற கோழி வளர்ப்பு

கட்டற்ற கோழி வளர்ப்பு முறையில் உணவு வழங்கப்படுகிறது.

இம்முறையின் கீழ் சிறிய அளவிலான கோழிவளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுவே ஆரம்பத்தில் செய்யப்பட்ட கோழிவளர்ப்பு முறையுமாகும். இம்முறையின் கீழ் கோழிகளின் நடமாட்டத்துக்கு எவ்வித தடையும் விதிக்கப்படுவதில்லை. இரவில் தங்குவதற்கும் முட்டை போன்றவை இடுவதற்கும் ஒரு கூடு காணப்படும். இம்முறையின் கீழ் செயற்கை வேதியல் பொருட்களின் பயன்பாடு குறைவாக அல்லது பூச்சியமாக காணப்படும். கோழிகளுக்கான உணவாக வீட்டில் எஞ்சும் உணவுப் பொருட்கள் இடப்படுவதோடு கோழிகள் தாமாகவே மண்புழு, பூச்சிகள் போன்றவற்றையும் தேடி உண்கின்றன. இம்முறையின் கீழ் கோழிகள் சுதந்திரமாக நடமாட மற்றும் தமது இயற்கை வாழ்க்கை முறைக்கு ஒத்த வாழ்வை வாழக்கூடியன ஆகையால் விலங்கு உரிமை ஆர்வலர்கள் இம்முறையை ஆதரிக்கின்றனர்.

பண்ணை முறைக் கோழி வளர்ப்பு

கூண்டு இல்லா முறை

கூண்டு இல்லாக் கோழிப் பண்ணை

இம்முறையின் கீழ் கோழிகள் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கும். இம்முறை முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தரை மரத்தூள், நிலக்கடலைக் கோதுகள் போன்ற ஈரப்பதனை உறியக்கூடிய பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கும். கோழிகளுக்கான உணவு, நீர் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். கோழிகளின் நடமாட்டம் அறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும். இது செலவு குறைவான முறை ஆனால் முட்டை உற்பத்தி கூண்டு முறையை விடக் குறைவாக இருக்கும். தீவனம் மிகுதியாக வீணாகும். அதிக இடம் தேவை.

கூண்டு முறை (Battery Hen)

இம்முறையின் கீழ் முட்டையிடும் கோழிகள் சிறிய கூண்டுகளில் (அமெரிக்க சீர் தரம் ஒரு கோழிக்கு 4 அங்குல உணவு வெளி்) அடைக்கப்படும். இவ்வாறான சிறிய கூண்டுகள் நிரை நிரையாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்படும். இவ்வாறு அடுக்கப்பட்ட கூண்டுகள் ஒரு பெரிய பண்ணை அறைக்குள் அமைக்கப்பட்டிருக்கும்.[3] கோழிகள் 18-20 வாரங்கள் வயதான போது கூண்டுகளில் அடைக்கப்படும். இவ்வாறு கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிவடைந்து மரணம் அடையும் வரை சுமார் 52 வாரங்கள் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும்.[4]

கூண்டுடைய கோழிப் பண்ணை

ஒரு குறிப்பிட்ட பண்ணைப் பரப்பில் அதிக எண்ணிக்கையிலான கோழிகளை வளர்க்களாம் என்பதால் முட்டை உற்பத்தி மிகுதியாகக் காணப்படும். இம்ம்றையின் கீழ் கூண்டு இல்லா முறையை விட 2 தொடக்கம் 4 மடங்கு அதிகமான எண்ணிகையான கோழிகளை வளர்க்கலாம். கோழிகள் முட்டையிட்டவுடன் தானகவே கூண்டைவிட்டு வெளியேறும் வகையில் கூண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் முட்டைகள் சேதமாவது குறைவாக காணப்படும்.

இம்முறையின் ஆரம்பச் செலவு கூண்டு இல்லா முறையை விட அதிகமானதாகும். சிறிய கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். கோழிகள் ஒன்றோடு ஒன்று உரசியபடியே கூண்டுகளுள் இருப்பதால் சிறகுகளை இழக்கும். மேலும் தோல் காயப்பட்டும் காணப்படலாம்.[3] பண்ணை முட்டைக் கோழிகள் ஆண்டுக்கும் 250 முட்டைகள் வரை இடக்கூடியதாகும். முட்டைக் கருவிற்கு தேவையான புரதத்தை பிரிப்பதால் நாளடைவில் இக்கோழிகளின் ஈரல்களில் அதிகளவான கொழுப்பு சேமிக்கப்படுகிறது.[3] இவ்வாறான கோழிகள் பல நோய்களுக்கு உள்ளாகினறன.[5]

2012 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம், கூண்டு கோழி வளர்ப்பு முறையை தமது அங்கத்திய நாடுகளில் தடைச் செய்துள்ளது.[6] ஆஸ்திரியா 2004 ஆம் ஆண்டு முதல் கூண்டு கோழி வளர்ப்பு முறையைத் தடைச் செய்துள்ளது.[7]

வளர்க்கப்படும் இடங்கள்

கோழி வளர்ப்பில் முதல் இடத்தில் ஐக்கிய அமெரிக்காவும் , 2ம் இடத்தில் சீனாவும், 3ம் இடத்தில் பிரேசிலும், 4ம் இடத்தில் மெக்சிகோவும், 5ம் இடத்தில் இந்தியாவும், 6ம் இடத்தில் பிரித்தானியாவும், 7ம் இடத்தில் தாய்லாந்தும் உள்ளன.

இந்தியாவின் கோழி வளர்ப்புத்துறை

இந்தியாவில் இருந்து பெருமளவிலான கோழிகள் இலங்கைக்கும் (50%), வங்காள தேசத்திற்கும் (32.5%), நேபாளத்திற்கும் (8.2%) ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் இருந்து பெருமளவிலான முட்டைகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் குவைத்துக்கும் ஓமனுக்கும் ஏற்றுமதியாகின்றன. முட்டை தூளானது ஜப்பானுக்கும் போலந்துக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன.

தமிழகத்தின் நாமக்கல் மண்டலம் கோழி வளர்ப்பில் முதன்மையானது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "PROTOCHICKEN" (html). Proceedings of the National Academy of Science, v.91. பார்க்கப்பட்ட நாள் 10-10-2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |accessyear= (help)
  2. "REDROVING FOWL". Down To Earth. 15 December 2000. Archived from the original (htm) on 2003-02-17. பார்க்கப்பட்ட நாள் 10-10-2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |accessyear= (help)
  3. 3.0 3.1 3.2 "Laying Hens". factoryfarming.com. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.
  4. "Facts and Figures – battery hens". Battery Hen Welfare Trust. Archived from the original on 2007-10-10. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.
  5. Davis, Karen. "The Battery Hen:Her Life Is Not For The Birds". all-creatures.org. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.
  6. "EUROPE BANS BATTERY HEN CAGES". Fall 1999 Poultry Press. 1999. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.
  7. Traynor, Ian (28 மே 2004). "Battery chickens outlawed". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Poultry farming
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Read other articles:

AwardHonour medal for railroadsHonour medal for railroads in silver, 1913-1939 variant (obverse)TypeMedalAwarded forLong service with the railroadsCountry FrancePresented bythe Minister of the InteriorEligibilityFrench and foreign nationalsStatusCurrently awardedEstablished19 August 1913 The Honour medal of railroads (French: médaille d’honneur des chemins de fer) is a state decoration bestowed by the French Republic in the form of an honour medal for work. It was originally meant to ...

 

В Википедии есть статьи о других людях с такой фамилией, см. Пушкин; Пушкин, Сергей. Сергей Львович Пушкин Сергей Львович Пушкин (1810-е) Дата рождения 23 мая (3 июня) 1770 Место рождения Санкт-Петербург, Российская империя Дата смерти 29 июня (11 июля) 1848 (78 лет) или 28 июня 1848(184...

 

Building at the University of California, Berkeley, United States Evans Hall as seen from Sather Tower in 2022. Panoramic view from Evans Hall, September 2010. Evans Hall is the statistics, economics, and mathematics building on the campus of the University of California, Berkeley. Computer History importance Evans Hall also served as the gateway for the entire west coast's ARPAnet access during the early stages of the Internet's existence; at the time, the backbone was a 56kbit/s line to Chi...

Administrative groupings of the Holy Roman Empire This article includes a list of references, related reading, or external links, but its sources remain unclear because it lacks inline citations. Please help to improve this article by introducing more precise citations. (September 2021) (Learn how and when to remove this template message) A map of the imperial circles in 1560   Burgundian Circle   Lower Rhenish–Westphalian Circle   Electoral Rhenish Circle ...

 

Voluntary aided school in Warwick, Warwickshire, EnglandSt Mary Immaculate Catholic Primary SchoolLocationWarwick, Warwickshire, CV34 5BGEnglandCoordinates52°17′15″N 1°35′10″W / 52.287605°N 1.586111°W / 52.287605; -1.586111InformationTypeVoluntary aided schoolReligious affiliation(s)Roman CatholicOpened1905Local authorityWarwickshire County CouncilDepartment for Education URN125717 TablesOfstedReportsHeadteacherMr. Robert GarganGenderMixedAge4 to 11Enro...

 

No debe confundirse con Encuentro Memoria, Verdad y Justicia. Se denomina procesos de Memoria, Verdad y Justicia a los procesos que culminan en los juicios por delitos de lesa humanidad llevados a cabo contra los responsables de las violaciones a los derechos humanos realizados en el marco del terrorismo de estado ocurrido durante la última dictadura cívico-eclesial-militar en la Argentina entre 1976 y 1983. Entre ellos se encuentran tanto las acciones de las organizaciones de Derechos Huma...

Artikel ini tidak memiliki referensi atau sumber tepercaya sehingga isinya tidak bisa dipastikan. Tolong bantu perbaiki artikel ini dengan menambahkan referensi yang layak. Tulisan tanpa sumber dapat dipertanyakan dan dihapus sewaktu-waktu.Cari sumber: Eka Darmaputera – berita · surat kabar · buku · cendekiawan · JSTOR Eka Darmaputera Eka Darmaputera (16 November 1942 – 29 Juni 2005) adalah seorang pendeta dan teolog Indonesia yang bany...

 

Use of forced labour in Nazi Germany and its occupied territories during World War II See also: Forced labor in Nazi concentration camps Use of forced labour by Nazi GermanyOriginal Nazi propaganda caption: A 14-year-old youth from Ukraine repairs damaged motor vehicles in a Berlin workshop of the German Wehrmacht. January 1945. Foreign forced labourersNumbers10 million (1944 est.)[1] including:     6.5 million civilians     2.2 m...

 

Hi. Deddy Abdul Hamid Wakil Bupati Bolaang Mongondow Selatan ke-4PetahanaMulai menjabat 26 Februari 2021Masa jabatan23 April 2019 – 17 Februari 2021PresidenJoko WidodoGubernurOlly DondokambeyBupatiIskandar KamaruPendahuluIskandar Kamaru Informasi pribadiLahir5 November 1969 (umur 54)Pinolosian, Sulawesi UtaraPartai politik  PDI-PSuami/istriRosdiana LapatolaAnak3PekerjaanPolitikusSunting kotak info • L • B Hi. Deddy Abdul Hamid (lahir 5 November ...

Onadio LeonardoLahirLeonardo Arya4 Januari 1990 (umur 33)Jakarta, IndonesiaKebangsaanIndonesiaNama lainOnadio LeonardoPekerjaanMusisiaktorpresenterpenyiniarTahun aktif2005—sekarangSuami/istriBeby Prisillia Gustiansyah ​ ​(m. 2019)​Anak1 Leonardo Arya, dikenal sebagai Onadio Leonardo (lahir 4 Januari 1990) adalah musisi, aktor, presenter, dan penyiniar Indonesia. Ia merupakan vokalis dan basis grup musik Killing Me Inside, yang sekarang menja...

 

American baseball player (born 1957) Baseball player Mike ChrisChris in 1983PitcherBorn: (1957-10-08) October 8, 1957 (age 66)Santa Monica, California, U.S.Batted: LeftThrew: LeftMLB debutJuly 31, 1979, for the Detroit TigersLast MLB appearanceMay 1, 1983, for the San Francisco GiantsMLB statisticsEarned run average6.43Record3-5Strikeouts46 Teams Detroit Tigers (1979) San Francisco Giants (1982–1983) Michael Chris (born October 8, 1957) is an American form...

 

Czech ice hockey player Ice hockey player Jaroslav Špaček Born (1974-02-11) February 11, 1974 (age 49)Rokycany, CzechoslovakiaHeight 5 ft 11 in (180 cm)Weight 206 lb (93 kg; 14 st 10 lb)Position DefenceShot LeftPlayed for HC PlzeňFärjestad BKFlorida PanthersChicago BlackhawksColumbus Blue JacketsHC Sparta PrahaEdmonton OilersBuffalo SabresMontreal CanadiensCarolina HurricanesNational team  Czech RepublicNHL Draft 117th overall, 1998Florida Pant...

Artikel ini tidak memiliki referensi atau sumber tepercaya sehingga isinya tidak bisa dipastikan. Tolong bantu perbaiki artikel ini dengan menambahkan referensi yang layak. Tulisan tanpa sumber dapat dipertanyakan dan dihapus sewaktu-waktu.Cari sumber: ALSA Indonesia – berita · surat kabar · buku · cendekiawan · JSTOR Asian Law Students' Association National Chapter IndonesiaSingkatanALSA IndonesiaTanggal pendirian1989StatusOrganisasi mahasiswaTujuanPe...

 

Ця стаття має кілька недоліків. Будь ласка, допоможіть удосконалити її або обговоріть ці проблеми на сторінці обговорення. Цю статтю треба вікіфікувати для відповідності стандартам якості Вікіпедії. Будь ласка, допоможіть додаванням доречних внутрішніх посилань або вд...

 

Latin American pay television channel This article relies excessively on references to primary sources. Please improve this article by adding secondary or tertiary sources. Find sources: FX Latin American TV channel – news · newspapers · books · scholar · JSTOR (June 2019) (Learn how and when to remove this template message) Television channel FX Latin AmericaBroadcast areaLatin AmericaProgrammingLanguage(s)spanish, englishOwnershipOwnerThe Walt D...

American writer W.D. WetherellBorn (1948-10-05) October 5, 1948 (age 75)Mineola, New York, U.S.Pen nameW.D. WetherellNotable worksThe Man Who Loved Levittown (1985), Chekhov's Sister (1990), A Century of November (2002), The Writing on the Wall (2012), A River Trilogy (2017)Websitewdwetherell.com W.D. Wetherell (born October 5, 1948) is an American writer of over twenty books, novels, short story collections, memoirs, essay collections, and books on travel and history. He was born in Min...

 

Bilateral relationsPeru–Kosovo relations Kosovo Peru Kosovo–Peru relations are foreign relations between Kosovo and Peru. Peru recognised Kosovo in 2008 after its declaration of independence from Serbia,[1][2] although formal relations have not been established. History Background See also: Peru–Yugoslavia relations Peru maintained warm relations with the Socialist Federal Republic of Yugoslavia, a country to which Kosovo and Metohija belonged within the Socialist Republ...

 

19th century Finnish sailor and soldier This article is an orphan, as no other articles link to it. Please introduce links to this page from related articles; try the Find link tool for suggestions. (August 2023) Peter HagersteinPeter Hagerstein (detail from Smirke's painting)BornPehr Hagersten (unconfirmed)1757HelsinkiDied1810 (aged 53)PapeeteNationalityFinnishOther names'Peter the Swede'CitizenshipSwedishOccupation(s)Sailor, soldier, translator, advisorYears activec. 1793 - ...

American politician David Marston Clough13th Governor of MinnesotaIn officeJanuary 31, 1895 – January 2, 1899LieutenantFrank A. DayJohn L. GibbsPreceded byKnute NelsonSucceeded byJohn Lind12th Lieutenant Governor of MinnesotaIn officeJanuary 9, 1893 – January 31, 1895GovernorKnute NelsonPreceded byGideon S. IvesSucceeded byFrank A. DayMember of the Minnesota SenateIn office1887-1893 Personal detailsBorn(1846-12-27)December 27, 1846Lyme, New Hampshire, U.S.DiedAug...

 

2002 single by Tweet Oops (Oh My)Single by Tweet featuring Missy Misdemeanor Elliottfrom the album Southern Hummingbird B-sideMy Place (album version)ReleasedJanuary 11, 2002 (2002-01-11)StudioWestlake Audio(West Hollywood, California)GenreR&BLength3:58Label The Goldmind Elektra Songwriter(s) Charlene Keys Missy Elliott Producer(s)TimbalandTweet singles chronology All Y'all (2001) Oops (Oh My) (2002) Call Me (2002) Missy Elliott singles chronology Son of a Gun (I Be...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!