விலங்குகளின் பண்ட அந்தஸ்து (ஆங்கில மொழி: commodity status of animals) என்பது பெரும்பாலும் மனிதரல்லா விலங்குகளை (குறிப்பாக பண்ணை விலங்குகள், பொதி விலங்குகள் மற்றும் மனித கேளிக்கைகளுக்கு ஆட்படுத்தப்படும் விலங்குகள் ஆகியவற்றை) மனிதர்கள் தங்கள் உடமைகளாகவும் வர்த்தகப் பண்டங்களாகவும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் சட்டப்பூர்வ நிலைபாடு அல்லது அந்தஸ்து ஆகும்.[1][2][3][n 1]ஐக்கிய அமெரிக்காவில் சுதந்திரமாக சுற்றித் திரியும் காட்டு விலங்குகள் பெரும்பாலும் அரசின் உடமைகளாகக் கருதப்படுகின்றன; அவை கைப்பற்றப்பட்டால் மட்டுமே கைப்பற்றிய அந்நபரின் தனிப்பட்ட சொத்தாக உரிமை கோர முடியும்.[a][6]
பண்டங்களாகக் கருதப்படும் விலங்குகள் வாங்கப்பட்டும், விற்கப்பட்டும், கொடுக்கப்பட்டும், உயிலாக எழுதப்பட்டும், கொல்லப்பட்டும், பண்ட உற்பத்திக்கான மூலப்பொருட்களாகக் கொள்ளப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இறைச்சி, முட்டை, பால், உரோமம், கம்பளி, தோல், விலங்குக் குட்டிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய விலங்குகள் மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.[7][8] ஒரு விலங்கின் பரிவர்த்தனை மதிப்பு அவ்விலங்கின் வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்தது அல்ல என்பதால் பரிவர்த்தனைச் செயற்பாடுகளுக்காக வேண்டி விலங்குகள் மனிதர்களால் பலவகையிலும் துன்புறுத்தப்படுகின்றன.[9]
கால்நடைகளின் பண்ட அந்தஸ்தினை ஏலக் கூடங்களிலும் விற்பனைக் கூடங்களிலும் கண்கூடாகப் பார்க்கலாம். இதுபோன்ற இடங்களில் அவ்விலங்குகள் பார்கோடு குறியீடுகளால் குறியிடப்பட்டு அவற்றின் வயது, எடை, பாலினம், இனப்பெருக்க வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் வர்த்தகப் பொருட்களாக மாற்றப்படுகின்றன.[10][11][n 2]
பண்டக சாலைகளிலும் சந்தைகளிலும் காப்பி, சர்க்கரை போன்ற பொருட்களின் வரிசையில் விலங்குகளும் விலங்குப் பொருட்களும் மென்பண்டங்கள் (soft commodities) என்று வகைப்படுத்தப்படுகின்றன. வன்பண்டங்களான (hard commodities) தங்கம், செம்பு உள்ளிட்டவைகளைப் போல் பூமியைத் தோண்டி எடுக்கப்படாமல் காப்பி, சர்க்கரை போன்றவற்றைப் போல் வளர்க்கப்பட்டுப் பெறப்படுவதால் விலங்குகள் இவ்வாறு மென்பண்டங்களாகக் கருதப்படுகின்றன.[12][n 3]
விலங்குகளை மனிதர்கள் பண்டங்களாகப் பார்க்கப்படுவதென்பது விலங்கினவாதத்தின் வெளிப்பாடு என்று ஆராய்ச்சியாளர்கள் இனம் காண்கின்றனர்.[14] இருபதாம் நூற்றாண்டின் நனிசைவ இயக்கமும் விலங்குரிமை இயக்கமும், குறிப்பாக ஒழிப்புவாத அணுகுமுறை வாயிலாக, விலங்குகளின் பண்ட அந்தஸ்தினை நிரந்தரமாகக் களைய அறைகூவல் விடுக்கின்றன.
வரலாறும் சட்டமும்
மனிதர்களால் உடமையாக்கிக் கொள்ளும் போது விலங்குகள் தனிநபர் சொத்துக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமாயின், அவை நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்களோடு இணைக்கப்படாமல் அசையும் சொத்தாகக் கருதப்படுகின்றன.[n 4] கால்நடை என்ற சொல்லுக்கு இணையான பிரெஞ்சு சொல்லான செப்டெல் என்பதும் பழைய பிரெஞ்சுச் சொல்லான சாட்டல் என்பதும் "தனிப்பட்ட சொத்து" என்று பொருட்படுகின்றன.[16]
வரலாற்றில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் ஆதிக்கம் அல்லது கட்டுப்பாட்டின் அடிப்படையிலும் வளர்க்கப்படும்போது விலங்குகள் வளர்ப்பவரின் உடமைகளாகின்றன என்ற சிந்தனையின் அடிப்படையிலும் தான் வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்று வரலாற்றாசிரியர் ஜாய்ஸ் ஈ. சாலிஸ்பரி எழுதுகிறார். காட்டில் வாழும் விலங்குகளைக் கடவுள் கட்டுப்படுத்துகிறார் என்றும் மற்ற விலங்குகளை மனித சமூகம் கட்டுப்படுத்துகிறது என்றும் புனித அம்ப்ரோஸ் (பொ.ஊ. 340–397) கருதுவதை மேலும் அவர் சுட்டிக்காட்டுகிறார். செவில்லைச் சேர்ந்த ஐசிடோர் (பொ.ஊ. 560–636), தாமஸ் அக்வினாஸ் (பொ.ஊ. 1225–1274) உள்ளிட்டோர் விலங்குகளை "கால்நடை" (வளர்ப்பு விலங்குகள்) என்றும் "மிருகங்கள்" (காட்டு விலங்குகள்) என்றும் வேறுபடுத்தினர்.[17]
கமெண்டரிஸ் ஆன் தி லாஸ் ஆவ் இங்லாண்டு ("இங்கிலாந்தின் சட்டங்கள் பற்றிய உரைகள்") (1765–1769) என்ற தனது நூலில் வில்லியம் பிளாக்ஸ்டோன் (1723–1780) என்ற ஆங்கில சட்ட அறிஞர் வளர்ப்பு விலங்குகளைப் பற்றி கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
“
பழக்கப்படுத்தப்பட்டு வளர்க்கப்படக் கூடிய இயல்பு கொண்ட (குதிரை, மாடு, ஆடு, கோழி போன்ற) விலங்குகள் யாவும் எந்த ஒரு ஜடப்பொருளைப் போலவும் மனிதனால் தனது சொத்துக்களாக முழு உரிமை கொண்டாடப் படக் கூடியவையே ... ஏனெனில் இவை நிரந்தரமாக அவனது தொழிலின் ஒரு பகுதியாகத் தொடர்கின்றன. மேலும் எதிபாராத விபத்தினாலோ மோசடியின் காரணமாகவோ அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் இவ்விலங்குகள் அவனை விட்டோ அவனது இருப்பிடத்தை விட்டோ நீங்குவதில்லை. அவ்விரு சந்தர்ப்பங்களிலும் கூட இவ்விலங்குகளின் உரிமையாளர் அவற்றின் மீதான தனது சொத்துரிமையை இழப்பதில்லை.[18]
”
காட்டு விலங்குகள் அனைவருக்கும் பொதுவானவை அல்லது அரசுக்குச் சொந்தமானவை என்றும், பிடிக்கப்பட்டால் மட்டுமே அவை தனிப்பட்ட சொத்தாக மாறக்கூடியவை என்றும் கூறும் கருத்தாக்கமானது "ஃபெரே நேச்சுரே" ("ferae naturae") எனப்படும் "காட்டுவாழ்" கோட்பாடு என்று அறியப்படுகிறது. காட்டுவாழ் விலங்குகள் "சொத்துக்கான பொருட்களே அல்ல" என்றும் "அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை நமது மற்ற பிரிவின் கீழ், அதாவது தகுதியான, வரையறுக்கப்பட்ட, அல்லது சிறப்புச் சொத்து என்ற வகையில், வரும்" என்றும் பிளாக்ஸ்டோன் கருதுகிறார். "இவ்வாறான விலங்குகள் அவற்றின் இயல்பில் நிரந்தரமாக இல்லாது சில சமயங்களில் வாழ முடிந்தும் சில சமயங்களில் வாழ முடியாமலும் போக நேரிடலாம்" என்று அவர் மேலும் உரைக்கிறார்.[19]
வரலாற்று அறிஞர் லூயிஸ் ராபின்ஸ் 18-ஆம் நூற்றாண்டில் வனவிலங்குகள் பிரான்சில் இறக்குமதி செய்யப்பட்டதைப் பற்றி எழுதுகையில், "விலங்குகள் அவற்றின் உண்மையான இருப்பிடங்களிலிருந்து எடுத்துவரப்பட்டு பாரிஸ் நகரில் பொருட்களைப் போன்று இறக்கப்பட்ட போது பண்டங்களின் நிலைக்குச் சரிவதும் அந்நிலையிலிருந்து உயர்வதுமாக மாறிமாறி இருந்துவந்ததும் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறாக மதிப்பிடப்பட்டு வந்ததையும் பார்க்க முடிகிறது" என்று குறிப்பிடுகிறார்.[20]:10 இவ்வாறு மனிதன் விலங்குகளோடு கொண்ட உறவின் தன்மையைப் பொறுத்து விலங்குகளின் "பண்டத்" தன்மை மாறுபடுவதைக் குறிக்கும் வகையில் சமூகவியலாளர் ரோடா வில்கி இவ்விலங்குகளை "உணர்திறன் கொண்ட பண்டம்" என்று வர்ணிக்கிறார்.[21] புவியியலாளர்களான ரோஸ்மேரி-கிளேர் கொலார்ட், ஜெசிகா டெம்ப்சே ஆகியோர் இதையே "உயிருள்ள பண்டங்கள்" என்ற சொல்லையிட்டு விவரிக்கின்றனர்.[2]
விலங்குகள் மீதான பொதுமக்களின் பொது அக்கறையின் காரணமாக 1990-களில் இருந்து விலங்கு நலனே பண்டமயமாக்கப்பட்டுள்ளது என்று அரசியல் அறிஞர் சாமி டோர்சோனென் உரைக்கிறார்.[22] "அறிவியல் ரீதியில் சான்றளிக்கப்பட்ட இந்த நலன் பொருட்கள் பண்டகச் சங்கிலியின் பல்வேறு முனைகளிலும் உற்பத்தி செய்யப்படுபவையாகவும் விற்கப்படுபவையாகவும் உள்ளன" என்றும் "மற்ற பொருட்களைப் போலவே இவையும் போட்டிக்கு உட்பட்டது" என்றும் அவர் கூறுகிறார்.[22] விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ பண்டமாக்கப்படாமல் இருப்பதற்கான உள்ளார்ந்த உரிமை இல்லையென்றே வைத்துக்கொண்டாலும் விலங்குகள் பண்டமாக்கப்படுவதை எதிர்ப்பதற்கு வலுவான நடைமுறை காரணங்கள்—அவை கொடூரமானதா அல்லது மோசமானவையா என்பதையும் தாண்டி—ஏராளமாக உள்ளன என்று சமூக அறிஞர் ஜேசி ரீஸ் ஆந்திஸ் நிறுவுகிறார்.[23]
விலங்குத் தொழிற்கூட்டின் தாக்கங்களில் முதன்மையான ஒன்று மனிதரல்லா விலங்குகளைப் பண்டமாக்கல் (அதாவது, வெறும் பயன்பாட்டுப் பொருளாகக் கருதுதல்) ஆகும். மனிதனின் உணவு அமைப்பில் விலங்குகளைப் பண்டமாக்கல் என்பது மனித, விலங்கு, மற்றும் சுற்றுச்சூழலின் நலனுக்கு எதிராக தனது "ஏகபோகத் தனியுரிமை கொண்ட பொருளாதார நோக்கை" மட்டுமே முன்னிறுத்திச் செயல்படும் முதலாளித்துவ அமைப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடையது என்ற பார்பரா நோஸ்கேயின் கூற்றை எஜுகேஷன் ஃபார் டோட்டல் லிபரேஷன் என்ற தனது நூலில் மேனகா ரெப்கா சுட்டுகிறார்.[24] இதே கருத்தை ரிச்சர்ட் ட்வைன் "விலங்குப் பொருட்களின் நுகர்வை ஒரு இன்பமளிக்கும் விஷயமாகச் சித்தரிக்கும் வகையில் அதைச் சுவைகூட்டி விளம்பரப்படுத்துவதில் செல்வாக்கு மிக்க வணிக வல்லமைப்புகள் தனித்த ஆர்வம் காட்டுகின்றன" என்று வழிமொழிகிறார்.[24]
↑David N. Cassuto (Professor of Law, Pace Law School), 2009: "These [farmer–animal] relationships did not necessarily maximize yield but were rather based on a set of normative guidelines even as the ultimate reality of the animals' commodity status inevitably imbued that bond with a sense of unreality."[4]
Samantha Hillyard (Reader in Sociology, Durham University), 2007: "The construction of FMD (foot-and-mouth disease) as an 'economic' disease (a disease that is controlled for economic and financial reasons, rather than purely animal health or welfare concerns) recognised animals' commodity status."[5]
↑Rosemary-Claire Collard, Kathryn Gillespie, 2015: "Nonhuman animals are subjected to various modes of bodily control in the space of the auction yard where they are exchanged as commodities and used in the production of new commodities. ... Farmed animals, like the cow with barcode #743, are sold and bought at auction to be used as commodity producers (e.g. for breeding, milk production, semen production) and as commodities themselves (e.g. to be slaughtered for 'meat')."[7]
↑The United States Commodity Exchange Act, which regulates commodity futures trading, defines commodities as "wheat, cotton, rice, corn, oats, barley, rye, flaxseed, grain sorghums, mill feeds, butter, eggs, Solanum tuberosum (Irish potatoes), wool, wool tops, fats and oils (including lard, tallow, cottonseed oil, peanut oil, soybean oil, and all other fats and oils), cottonseed meal, cottonseed, peanuts, soybeans, soybean meal, livestock, livestock products, and frozen concentrated orange juice, and all other goods and articles, except onions (as provided by section 13–1 of this title) and motion picture box office receipts (or any index, measure, value, or data related to such receipts), and all services, rights, and interests (except motion picture box office receipts, or any index, measure, value or data related to such receipts) in which contracts for future delivery are presently or in the future dealt in."[13]
↑இருப்பினும், அழிந்துவரும் உயிரினங்களைப் பிடிப்பதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவில் தடைகள் இருக்கலாம்
மேற்கோள் தரவுகள்
↑Rhoda Wilkie, "Animals as Sentient Commodities", in Linda Kalof (ed.), The Oxford Handbook of Animal Studies, Oxford University Press (forthcoming; Wilkie's article, August 2015). எஆசு:10.1093/oxfordhb/9780199927142.013.16
Rhoda Wilkie, "Sentient Commodities: The Ambiguous Status of Livestock," Livestock/Deadstock: Working with Farm Animals from Birth to Slaughter, Philadelphia, PA: Temple University Press, 2010, pp. 115–128; 176–177.
Gregory R. Smulewicz-Zucker, "The Problem with Commodifying Animals," in Gregory R. Smulewicz-Zucker (ed.), Strangers to Nature: Animal Lives and Human Ethics, Lanham, MD: Lexington Books, 2012, pp. 157–175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-7391-4549-4.
That companion animals are commodities, Lori Gruen, Ethics and Animals, New York: Cambridge University Press, 2011, p. 156.
↑David N. Cassuto, "Owning What You Eat: The Discourse of Food," in J. Ronald Engel, Laura Westra, Klaus Bosselman (eds.), Democracy, Ecological Integrity and International Law, Newcastle Upon Tyne: Cambridge Scholars Publishing, 2009, p. 314; also see pp. 306–320.
↑Samantha Hillyard, The Sociology of Rural Life, Berg, 2007, p. 70.
↑Joan E. Shaffner, An Introduction to Animals and the Law, Palgrace Macmillan, 2001, pp. 19–20.
↑ 7.07.1Rosemary-Claire Collard, Kathryn Gillespie, "Introduction," in Kathryn Gillespie, Rosemary-Claire Collard (eds.), Critical Animal Geographies, London: Routledge, 2015, p. 2.
↑Kathryn Gillespie, "Nonhuman animal resistance and the improprieties of live property," in Irus Braverman (ed.), Animals, Biopolitics, Law, Abingdon, Oxon: Routledge, 2015, pp. 117–118; also see the section "The Animal-as-Commodity," p. 121ff.
↑Patrick Maul, Investing in Commodities, Hamburg: Diplomica Verlag GmbH, 2011, p. 8, table c.
↑Brügger, Paula (2020). The Capitalist Commodification of Animals. Chapter: Animals and Nature: The Co-modification of the Sentient Biosphere (Research in Political Economy, Vol. 35) (1 (Brett Clark, Tamar Diana Wilson, eds.) ed.). Bingley, UK: Emerald Publishing Limited. pp. 33–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-1-83982-681-8.
↑Robbins, Louise E. (1998). Elephant slaves and pampered parrots: Exotic animals and their meanings in eighteenth-century France. Madison: University of Wisconsin–Madison. p. 10.
Pedersen, Helena; Staescu, Vasile. "Conclusion: Future Directions for Critical Animal Studies," in Nik Taylor, Richard Twine (eds.), The Rise of Critical Animal Studies: From the Margins to the Centre, London: Routledge, 2014, pp. 262–276.
Francione, Gary. Animals, Property and the Law, Philadelphia, PA: Temple University Press, 1995.
Richards, John F.The World Hunt: An Environmental History of the Commodification of Animals, University of California Press, 2014.
Steiner, Gary. Animals and the Limits of Postmodernism, New York: Columbia University Press, 2013.
Clark, Brett; Wilson, Tamar Diana (Eds.). The Capitalist Commodification of Animals (Research in Political Economy series), Bingley, UK: Emerald Publishing Limited, 2020. ISBN 978-1-83982-681-8.