நேரடி நடவடிக்கை எங்கெங்கும், அல்லது டைரக்ட் ஆக்ஷன் எவ்ரிவேர் (டிஎக்சி, DxE), என்பது சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் 2013-ம் ஆண்டு நிறுவப்பட்ட விலங்குரிமை ஆர்வலர்களின் சர்வதேச அடிமட்ட வலையமைப்பு ஆகும்.[1] தொழிற்முறை விலங்குப் பண்ணைகளில் இருந்து விலங்குகளை திறந்தமுறை மீட்டல் உள்ளிட்ட சீர்குலை எதிர்ப்புகளையும் வன்முறையற்ற நேரடி நடவடிக்கை உத்திகளையும் டிஎக்சி பயன்படுத்துகிறது.[2] இறுதியாக கலாச்சாரத்தைத் திருத்தி சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களை மாற்றக்கூடிய ஒரு இயக்கத்தை உருவாக்குவதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.[3] "விலங்குகளின் பண்ட அந்தஸ்தினை மாற்றி விலங்குச் சுரண்டலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்கிற நோக்கில் டிஎக்சி ஆர்வலர்கள் செயல்படுகின்றனர்.[4]