முதனி

முதனிகள்[1]
புதைப்படிவ காலம்:Late Paleocene–recent
Aye-ayeRing-tailed lemurCapuchin monkeySpider monkeyகிப்பன்TarsierRed slender lorisLion tamarinHamadryas baboonCommon chimpanzee
(சில முதனிக்குடும்பங்கள் (மேலிருந்து கீழாக) டௌபென்டொனிடே, தார்சிடே, லெமூரிடே, லோரிசிடே, செபிடே, காலிட்ரிகிடே, அடேலிடே, செர்கோபிதெசிடே, ஹைலோபேடிடே, ஹோமினிடே.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
உள்வகுப்பு:
பெருவரிசை:
யூவார்கோன்டோக்ளையர்ஸ்
வரிசை:
முதனிகள்

குடும்பங்கள்
  • 15, பார்க்கவும்
மனிதனல்லாத முதனிகளின் பரவல் (பச்சை)

முதனி (Primate) (/ˈprmt/ (கேட்க) PRY-mayt) (இலத்தீன்: "prime, முதன்மை") என்பது உயிரினத்தில் பாலூட்டிகளின் பெரும்பிரிவில் முதன்மையான பாலூட்டி இனங்கள் ஆகும்.[2][3] சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், மிதவெப்பமண்டலக் காடுகளிலுள்ள மரங்களில் தொங்கி தாவி வாழ்ந்த ஆதி விலங்கினங்களிலிருந்தும், பூச்சிப் புழுக்களை உண்டுவந்த பூச்சியுண்ணிப் பிரிவில் இருந்து தோன்றியும் கிளைத்த இனங்கள்தாம் குரங்குகளும், வாலில்லா மனிதக் குரங்குகளும், மனிதர்களுமாகிய 180க்கும் அதிகமான தனி விலங்கின முதனி வகைகள். முதனிகள் மரங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன. இன்னமும் சில முதனிகள் இம்முப்பரிமாண வாழ்விடங்களுக்கேற்ப தங்கள் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. பெரும்பாலான முதனிகள் மரத்தில் தொங்கி வாழ்பவையாகவே உள்ளன. உயிரின வகைப்பாட்டியலில் முதனிகள் ஈரமூக்கு கொண்டவை, ஸ்டெப்சிரினீ, வறண்டமூக்கு கொண்டவை ஹேப்லோரினீ இருபெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன.[1]

முதனிகளில் மனிதன் நீங்கலாக[4],அனைத்து முதனிகளும் வெப்ப, மிதவெப்ப மண்டல கண்டங்களான ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா ஆகியவற்றில் தான் அதிகம் காணப்படுகின்றன. இவைகளின் உரு, பருமனில், மடாம் பெர்த் எலி லெமூர்களின், எடையானது 30 g (1 oz) ஆகவும், கிழக்கத்திய கொரில்லாக்களின், எடை சுமார் 200 kg (440 lb)க்கும் அதிகமாகவும் இருக்கும்; மேலும் மனித சராசரி எடையைக் ஒப்பிடுகையில் 635 kg (1,400 lb) ஆகவும் இருக்கும்.[5] படிமங்களின் அடிப்படையில் முதனிகளின் ஆதி இனமாக 55.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த டெயில்ஹர்டினா பேரினம் கொள்ளப்படுகிறது.[6] பாலியோசின் யுகத்தில் (சுமார் 55–58 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்) வாழ்ந்த முதனிகளின் ஆதியினம் பிலெசியாடாப்சிஸ் c. ஆகும்.[7] கரிம மூலக்கூறு கடிகார படிமவியலின் படி 63–74 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அதாவது கிரட்டேசியஸ்-பாலியோஜீன் (K-Pg) யுகங்களுக்கு இடைப்பட்ட காலத்திலேயே முதனிகளின் இனக்கிளை தோற்றம் இருந்திருப்பதாக அறியப்படுகிறது.[8][9][10][11]

வட அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் முதனிகளின் பரவல் கிடையாது. ஆனால் வட ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்ட்டர் வரையிலுமுள்ள 6.5 ச.கி.மீ பரப்பளவில், வாலில்லா பார்பரி என்னும் ஒரேயொரு குரங்கினம் மட்டுமே பரவலாக உள்ளது.

மனிதர்கள் உட்பட, கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான், கிப்பன், லெமூர், பலவகையான குரங்குகள், தென் அமெரிக்க அரிங்குகள், தேவாங்கு,புதர்ச்சேய், முதலியன சேர்ந்த ஒரு பேரினம். இந்த முதனி இனத்தில் 52 உள் இனங்களும் அவற்றில் மொத்தம் 180க்கும் அதிகமான தனி விலங்கு வகைகளும் உள்ளன என முதனியறிஞர்கள் (primatalogists) கருதுகின்றனர். முதனிகள் உயிரின பரிணாம வளர்ச்சி வரலாற்றின் மிக அண்மைக் காலத்திலே கிளைத்துப் பெருகியதாக கருதப்படுகின்றன.

வரலாறு, நவீன வகைப்பாட்டியல்

முதனிகளை ஆதிக்குரங்கினம் (புரோசிமியன்), மனிதக்குரங்கினம் (சிமியன்) என இரு வரிசையில் வகைப்படுத்தலாம். ஆதிக்குரங்கினங்களின் (புரோசிமியன்கள்) பண்புகள் என வகைப்படுத்தப்படுபவை ஆதி முதனிகளான மடகாஸ்கரில் வாழும் லெமூர்கள், தேவாங்குகள், பெருவிழிகளுடைய சிறு தேவாங்குகள் போன்றவற்றை ஒத்து காணப்படுகின்றன. அதே போன்று, குரங்குகள், மனிதக்குரங்குகள், மனிதர் போன்றவை மனிதக்குரங்கினத்திற்குள் வகைப்படுத்தப்படுகின்றன. மேலும், அண்மைய ஆய்வின்படி, வகைப்பாட்டியலறிஞர்கள் மேலும் முதனிகளை ஈரமூக்கு முதனிகள் (ஸ்ட்ரெப்சிரினீ), வறண்டமூக்கு முதனிகள் (ஹேப்ரிலோரினீ) என இரு துணைவரிசைகளில் வகைப்படுத்துகின்றனர். முதனிகளின் பரிணாமப் பரவல் வாலுள்ள தேவாங்குகளிலிருந்து வாலற்ற மனிதக்குரங்குகள், மனிதன் வரை விரிவடைந்துள்ளது.

முதனிகள் ஒரே மூதாதையரை ஒத்த பல பிரிவுகளாக பரிணமித்துள்ளன. இதனை "ஓரினபரிணாமக்கிளை" (மோனோபைலடிக்) என்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைப்பாட்டுக்கிளையில் அதன் அறிவியற் பெயரும் (இடப்புறம்), பொதுப்பெயரும் (வலதுபுறம்) குறிப்பிடப்பட்டுள்ளது [12]

பிரைமடோமார்ஃபா

 டெர்மோப்டீரா

 முதனிகள் 
 ஹேப்லோரினீ 
 சிமீஃபார்ம்ஸ் 
 கேதாரினீ 
 ஹோமொனாய்டீயே 
 ஹோமினிடே 
 ஹோமினினே 
 ஹோமினினீ 

மனிதர் (பேரினம் ஹோமோ) 



சிம்ப்பன்சிகள் (பேரினம் பான்) 



 கொரில்லினீ 

கொரில்லாக்கள் (பேரினம் கொரில்லா)  





ஒராங்குட்டான்கள் (துணைக்குடும்பம் பொங்கினே)  




கிப்பன்கள் (குடும்பம் ஹைலொபேடிடே)  




பண்டைய உலக மந்திகள் (பெருங்குடும்பம் செர்கோபிதெகோய்டியே)  




புதிய உலக மந்திகள் (பார்வோடெர் ப்ளேதிரினீ)  



 டார்சிஃபார்ம் 

டார்சியர்கள் (பெருங்குடும்பம் டார்சியோய்டியே)  




 ஸ்ட்ரெப்சிரினீ 
லெமூரிஃபார்ம்ஸ் 

லெமூர்கள் (பெருங்குடும்பம் லெமூராய்டியே)  



லோரிசிடே தேவாங்கு(பெருங்குடும்பம் லோரிசோய்டியே)  





புரோசிமியன்கள் (தேவாங்கினங்கள்)
ஆதிக்குரங்கினம்
பெரு மனிதக் குரங்கு இனம்
மனித இனம்
சிறு மனிதக் குரங்கினம்

முதனிகளின் உடலியற் பண்புகள்

  • முதனிகளுக்கு மூளைப்பருமன் அதிகம். இவைகளின் மூளை மொத்த உடல் எடையோடு ஒப்பிடும் பொழுது மற்ற விலங்குகளைக் காட்டிலும் பெரும்பாலும் அதிகமானது. இவை சிறந்த மூளை வளர்ச்சியுடையன.
  • முதனிகளின் கைகளும் கால்களும் சிறப்பாக மற்ற விலங்குகளில் இருந்து மாறுபடுகின்றன. கால்களில் ஐந்து விரல்களுண்டு. கைகளிலே, கட்டை விரலானது (பெருவிரல்) மற்ற நான்கு விரல்களுக்கும் எதிர்தாற் போலவும், மரக்கிளைகளைப் பற்றுவதற்கு ஏற்றாற் போலவும் அமைந்துள்ளன.
  • கை கால்களின் விரல் நகங்கள் பெரும்பாலும் தட்டையாக உள்ளன (பிற விலங்குகளைப்போல உருண்டு முள் போலும் உள்ள உகிர்கள் அல்ல).
  • உள்ளங்கை, உள்ளங்கால்கள் தவிர ஏனைய பகுதிகளில் உரோமங்களைக் கொண்டுள்ளன.
  • முன்னங்கால்கள் (அ) கைகள் சிறியவை.
  • பல் அமைப்பு பல பற்களைக்கொண்டதாகவும், கடைவாய்ப் பற்கள் பல கூரான பகுதிகளும், குழிகளும் கொண்டு இருக்கின்றன. கொரில்லாக்களின் கடைவாய்ப் பற்களில் ஐந்து குழிகளும், மற்ற குரங்கினங்களிலே நான்கு குழிகள் கொண்டதுமாக உள்ளன.
  • கண்கள் இரண்டும் முகத்தில் முன்னோக்கி அமைந்துள்ளன. இதற்கு பைனாகுலர் பார்வை (அ) இருகண் பார்வை எனப்பெயர். அதாவது, இரண்டுகண்களும் ஒரு சேர ஒன்றைப்பார்த்து அக்காணும் பொருட்களின் திரட்சி (2D-இருபரிமாணம்) வடிவை அறிவதாகும். கண் கூம்புகள் பல நிறம் உணரும் திறம் படைத்திருக்கின்றன.

பால் ஈருருமை

முதனிகளின் பாலியலில் பால் ஈருருமையைக் கொண்டுள்ளன. அதாவது ஒரே இனத்தில் ஆண், பெண் பால் வேறுபாட்டுடன், சில உடற் சார்ந்த மாற்றங்களையும் கொண்டிருப்பதாகும். சான்றாக, அவற்றின் தோலின் நிறம்,[13] உடற் பருமன்,[14][15] மற்றும் கனைன் பற்களின் அளவு[16][17] முதலியவற்றில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.

சிம்பன்சி என்னும் வாலில்லா குரங்கு. இது மனிதர்கள் உட்பட்ட முதனி குடும்பத்தைச் சேர்ந்தது.

இடம்பெயரும் தன்மை

முதனிகள் நாற்காலிகளாகவோ, இருகாலில் இடம்பெயர்பவையாகவோ, மரங்களில் தொங்கி, தாவி வாழ்பவையாகவோ, தவழ்பவையாகவோ, நடப்பவையாகவோ மற்றும் ஓடுபவையாகவோ ஓரிடத்திலிருந்து பாலூட்டிகளின் சிறப்பு உறுப்புகளான கை, கால்களின் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.

முதனி வகை இடம்பெயரும் முறை
தேவாங்குகள், லெமூர்கள் (புரோசிமியன்கள்)[18] கிடைமட்டமாக மரத்தில் நான்கு கால்களின் மூலம் ஏறுதல்
கிப்பன்கள், வாலுள்ள குரங்கு வகைகள் மரங்களில் தொங்கி வாழ்பவை
மனிதக்குரங்குகள்-சிம்ப்பன்சிகள், கொரில்லாக்கள், மற்ற வாலற்ற குரங்கு வகைகள் கால்களின் மூலம் நடத்தல், கைகளை நிலத்தில் ஊன்றி குதித்து ஓடுதல்
மனிதர் இரு கால்களின் மூலம் நடத்தல்

முதனிகளின் சமூகப் பண்புகள்

மற்ற உயிரினங்களைக் காட்டிலும் முதனிகளின் தனித்துவமே, அவற்றின் சமூகப் பண்புகள் தாம்,

  • சேய் பாதுகாப்பு (maternal care) மற்றும் பெற்றோர் மீதான சார்பு.
  • முதனிகளின் மூளை அளவும் அறிவுத்திறன் மற்ற விலங்குகளை விட அதிகம், அதே போல் அவற்றின் வளர்ச்சிக் காலமும் அதிகம். இதன் காரணமாக பிறந்து நீண்ட காலம் வரை அவை பெற்றோர் அல்லது பிற மூத்த முதனிகளைச் சார்ந்து வாழுகின்றன.
  • முதனிகளின் தாய்மைப் பண்பு ஒரு குமுகப் பண்பு (social trait) என்றும் வெறும் விலங்கின உள்ளுணர்வு சார்ந்த இயல்பான ஒன்று இல்லை என்றும் (ஹாரி ஃப்ரெட்ரிக் கார்லோவின்) இரீசசுக் குரங்குகள் மீதான ஆய்வுகள் தெரிவிக்கின்றன்.
    மேற்கத்திய கீழ்நில கொரில்லா
  • ஒன்றைப் பார்த்து நடித்தல் (imitation) அல்லது கற்றல் (learning).
ஒராங்குட்டான்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 111–184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. "Primate". Merriam-Webster Online Dictionary. Merriam-Webster. அணுகப்பட்டது 2008-07-21. 
    From Old French or French languageprimat, from a noun use of Latin primat-, from primus ("prime, first rank")
  3. The English singular primate was derived via back-formation from the Latin inflected form which Carl Linnaeus introduced in his influential 1758 10th edition of Systema Naturae because he thought this the "highest" order of mammals.
  4. "Who Lives in Antarctica? The Population of Antarctica". Archived from the original on January 12, 2016. பார்க்கப்பட்ட நாள் March 6, 2016.
  5. "Human Body/Extreme Bodies/Greatest Weight Loss". Guinness World Records. Archived from the original on 2006-09-01. பார்க்கப்பட்ட நாள் 2008-10-28.
  6. O'Leary, M. A. (8 February 2013). "The placental mammal ancestor and the post–K-Pg radiation of placentals". Science 339 (6120): 662–667. doi:10.1126/science.1229237. பப்மெட்:23393258. https://archive.org/details/sim_science_2013-02-08_339_6120/page/662. 
  7. Helen J Chatterjee, Simon Y.W. Ho, Ian Barnes & Colin Groves; Ho; Barnes; Groves (27 October 2009). "Estimating the phylogeny and divergence times of primates using a supermatrix approach". BMC Evolutionary Biology 9 (1): 259. doi:10.1186/1471-2148-9-259. பப்மெட்:19860891. 
  8. Stanyon, Roscoe; Springer, Mark S.; Meredith, Robert W.; Gatesy, John; Emerling, Christopher A.; Park, Jong; Rabosky, Daniel L.; Stadler, Tanja et al. (2012). "Macroevolutionary Dynamics and Historical Biogeography of Primate Diversification Inferred from a Species Supermatrix". PLoS ONE 7 (11): e49521. doi:10.1371/journal.pone.0049521. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:23166696. பப்மெட் சென்ட்ரல்:3500307. http://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0049521. 
  9. Jameson, Natalie M.; Hou, Zhuo-Cheng; Sterner, Kirstin N.; Weckle, Amy; Goodman, Morris; Steiper, Michael E.; Wildman, Derek E. (September 2011). "Genomic data reject the hypothesis of a prosimian primate clade". Journal of Human Evolution 61 (3): 295–305. doi:10.1016/j.jhevol.2011.04.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0047-2484. பப்மெட்:21620437. http://www.sciencedirect.com/science/article/pii/S0047248411000911. 
  10. Pozzi, Luca; Hodgson, Jason A.; Burrell, Andrew S.; Sterner, Kirstin N.; Raaum, Ryan L.; Disotell, Todd R. (June 2014). "Primate phylogenetic relationships and divergence dates inferred from complete mitochondrial genomes". Molecular Phylogenetics and Evolution 75: 165–183. doi:10.1016/j.ympev.2014.02.023. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:24583291. பப்மெட் சென்ட்ரல்:4059600. http://www.sciencedirect.com/science/article/pii/S1055790314000827. 
  11. Stanyon, Roscoe; Finstermeier, Knut; Zinner, Dietmar; Brameier, Markus; Meyer, Matthias; Kreuz, Eva; Hofreiter, Michael; Roos, Christian (16 July 2013). "A Mitogenomic Phylogeny of Living Primates". PLoS ONE 8 (7): e69504. doi:10.1371/journal.pone.0069504. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. http://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0069504. 
  12. Cartmill, M.; Smith, F. H. (2011). The Human Lineage. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-21145-8.
  13. Crook, J. H. (1972). "Sexual selection, dimorphism, and social organization in the primates". In Campbell, B. G. (ed.). Sexual selection and the descent of man. Aldine Transaction. pp. 246. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-202-02005-1.
  14. Ralls, K. (1976). "Mammals in Which Females are Larger Than Males". The Quarterly Review of Biology 51 (2): 245–76. doi:10.1086/409310. பப்மெட்:785524. 
  15. Lindstedtand & Boyce; Boyce, Mark S. (July 1985). "Seasonality, Fasting Endurance, and Body Size in Mammals". The American Naturalist 125 (6): 873. doi:10.1086/284385. 
  16. Frisch, J. E. (1963). "Sex-differences in the canines of the gibbon (Hylobates lar)". Primates 4 (2): 1–10. doi:10.1007/BF01659148. 
  17. Kay, R. F. (1975). "The functional adaptations of primate molar teeth". American Journal of Physical Anthropology 43 (2): 195–215. doi:10.1002/ajpa.1330430207. பப்மெட்:810034. 
  18. Sussman, R. W. (1999). Primate Ecology and Social Structure Volume 1: Lorises, Lemurs and Tarsiers. Needham Heights, MA: Pearson Custom Publishing & Prentice Hall. pp. 78, 89–90, 108, 121–123, 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-536-02256-9.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!