நவம்பர் 2007 2007 ஆம் ஆண்டின் பதினோராவது மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி கார்த்திகை மாதம் நவம்பர் 17 இல் தொடங்கி டிசம்பர் 15 இல் முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள்
நிகழ்வுகள்
- நவம்பர் 30 - இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற திடீர் தேடுதல் வேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள், யுவதிகள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் அடைக்கப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 28 - கொழும்பு நுகேகொடவில் ஆடையகம் ஒன்றில் குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லப்பட்டு 40 பேர் படுகாயமடைந்தனர். (பிபிசி), (புதினம்)
- நவம்பர் 28 - கொழும்பில் நாரஹென்பிட்டியிலுள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்தின் உள்ளே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பெண் தற்கொலைதாரி மற்றும் ஒருவர் கொல்லப்பட்டு இரண்டு பேர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- நவம்பர் 27 - கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- நவம்பர் 27 - இலங்கை இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளிநொச்சி நகரிலிருந்து 25 கிமீ மேற்கில் உள்ள ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 26 - அனுராதபுரம் "மகாவிலாச்சிய" என்ற கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் நான்கு பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. (புதினம்)
- நவம்பர் 25 - கிளிநொச்சி தர்மபுரத்தில் இலங்கை வான்படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். (புதினம்)
- நவம்பர் 24 - இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 22 - அம்பாறை வக்குமுட்டியாவில் உள்ள சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமின் காவலரண் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 3 படையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 22 - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. (புதினம்)
- நவம்பர் 21 - கொழும்பின் தென்பகுதியில் உள்ள இரத்மலானையில் அமைந்துள்ள "சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" ஆகிய வார ஏடுகளின் அச்சகம் அதிகாலை அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் எரித்து அழிக்கப்பட்டது. (புதினம்)
- நவம்பர் 16 - இலங்கை வான்படையின் குண்டுவீச்சினால் கிளிநொச்சி நகருக்கு தெற்கே திருமுறிகண்டியில் உள்ள தனியாரின் படகுக் கட்டுமானத் தொழிலகம் முற்றாக அழிக்கப்பட்டது. (புதினம்)
- நவம்பர் 16 - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை ஐக்கிய அமெரிக்கா முடக்கியது. (புதினம்)
- நவம்பர் 10 - அம்பாந்தோட்டை யால காட்டுப்பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்து மற்றொருவர் படுகாயமடைந்தார். (சண்டேரைம்ஸ்)
- நவம்பர் 8 - தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனை இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜோன் சொல்பேர்க் கிளிநொச்சியில் சந்தித்துப் பேசினார்.(புதினம், தமிழ்நெட்)
- நவம்பர் 7 - யாழ். கிளாலி முதல் முகமாலை வரையான பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட பாரியளவிலான முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் 20-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு 100-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்ததாகவும் ஒரு போராளி இறந்ததாகவும் புலிகள் தெரிவித்தனர். 52 புலிகளும் தமது தரப்பில் 11 பேரும் இறந்ததாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.(புதினம்), (டெய்லி மிரர்)
- நவம்பர் 5 - கருணா அணியிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் அணியினர் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியுள்ளனர். (பிபிசி, டெயிலி மிரர்)
- நவம்பர் 4 - வவுனியா மாவட்டம் தவசிக்குளத்தில் 5 இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். முதல் நாள் இவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். (புதினம்), (பிபிசி தமிழோசை).
- நவம்பர் 3 - இலங்கையில் இருந்து இரகசியமாக லண்டனுக்கு சென்ற துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக லண்டனில் கைது செய்யப்பட்டார். (பிபிசி)
- நவம்பர் 2 - தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பதவி வகித்து வரும் பா. நடேசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் நியமிக்கப்பட்டார். (புதினம்)
- நவம்பர் 2 - இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 1 - மன்னாரின் உயிலங்குளம், பாலைக்குழி மற்றும் கட்டுரைக்குளம் ஆகிய இடங்களில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட நகர்வுகளை விடுதலைப் புலிகள் முறியடித்ததாகவும் 25 படையினரும் 7 புலிகளும் இச்சமரில் கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர். (தமிழ்நெட்)
- நவம்பர் 1 -முருங்கன் மன்னார் முன்னரங்க நிலைகளில் ஏற்பட்ட மோதல்களில் இரு தரப்பிற்கும் சேதம் ஏற்பட்டது. குறைந்தது ஒரு குடிமகள் கொல்லப்பட்டாள்.(தமிழ்நெட்), (இலங்கை பாதுகாப்பு அமைச்சு)
- நவம்பர் 1 - எல்லாளன் நடவடிக்கை: அநுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளத்தின் மீதான எல்லாளன் நடவடிக்கையின் போது சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கான உயர் விருதுகளை விடுதலைப் புலிகளின் வே. பிரபாகரன் வழங்கி மதிப்பளித்துள்ளார். (தமிழ்நெட்)