ஈழப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும் போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. பல்வேறு காலகட்டங்களில் ஈழப்போர் பல்வேறு தன்மைகளுடனும் தாக்கங்களுடனும் அமைப்புகள் ஊடாகவும் வெளிப்பட்டு இருக்கின்றது. கால ஓட்டத்தையும் முக்கிய திருப்புமுனைகளையும் முதன்மையாக வைத்து ஈழப்போரை நான்கு கட்டங்களாக வகுப்பர். அவை பின்வருமாறு:
- புலிகள் எதிர் இந்திய அமைதி காக்கும் படை
ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு என்பது தமிழ் விக்கிபீடியாவில் ஈழப் போர் தொடர்பான செய்திகளை தொகுத்து எதிர்கால தேவைகளுக்காக சேமித்து வைக்கும் நோக்குடனான திட்டமாகும். இதில் ஈழப்போருடனான செய்திகளை அவற்றுக்கான மூல ஆதரங்களுடன் சேகரிக்க முயற்சி செய்யப்படுகிறது. செய்திகள் ஒன்று அல்லது இரண்டு வரிகளில் இருக்குமாறு தொகுக்கப்படல் வேண்டும். முக்கிய சம்பவங்கள் பற்றி ஒன்று அல்லது இரண்டு வரிகளில் எழுத முடியாவிட்டால் அவற்றைப் பற்றிய தனிக்கட்டுரைகளை எழுதுவதைப் பற்றி சிந்திக்கவும்.
இத்தொகுப்பு விக்கிபீடியா நடப்பு நிகழ்வுகளில் இணைக்கப்படும் ஈழப் போர்ச் செய்திகளின் தொகுப்பாகும். இதில் சில செய்திகள் விடுபட்டுள்ளதாக நீங்கள் கருதினால் சம்பவம் நடைப்பெற்ற மாத தலைப்பிற்கு எதிராக தரப்பட்டுள்ள "தொகு" என்ற இணைப்பை சொடுக்கி இணைப்பு இட்டுச் செல்லும் வார்ப்புருவில் செய்திகளை இணைத்து சேமிப்பதன் மூலம் இத்தொகுப்பில் மேலதிகச் செய்திகளைச் சேர்க்கலாம்.