இந்த பகுதி 1513 இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
ஏப்ரல் 2 - யுவான் போன்சு டெ லெயோன் புளோரிடாவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.
செப்டம்பர் 9 - இசுக்கொட்லாந்தின் மனரசன் நான்காம் யேம்சு ஆங்கிலேயப் படையினருடன் புளோடன் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். யேம்சின் மகன் ஐந்தாம் யேம்சு என்ற பெயரில் அரசனானான்.
இந்த பகுதி 1515 இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
சனவரி 25 - முதலாம் பிரான்சிசு பிரெஞ்சு மன்னராக முடிசூடினார்.
சூலை 22 - வியென்னாவில் இரண்டு அரச் திருமணங்கள் இடம்பெற்றன. அங்கேரி மன்னர் இரண்டாம் விளாதிசுலாசின் ஒரே மகன் லூயி, புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமீலியனின் பேர்த்தியான ஆத்திரியாவின் மேரியை மணம் முடித்தான். மேரியின் தம்பி முதலாம் பெர்டினாண்டு இரண்டாம் விளாதிசுலாசின் மகள் அன்னாவை உடன்பாடு ஒன்றின் பேரில் மணம் புரிந்தான்.
ஆகத்து 25 - டியேகோ விலாசுக்கெசு டெ குவெல்லார் அவானா நகரைக் கண்டுபிடித்தார்.
ஐரோப்பிய வணிகர் ரபாயெல் பெரெஸ்ட்ரெல்லோ தெற்கு சீனாவில் 1513 இல் சென்ற பின்னர் முதல் தடவையாக வணிகர் குழு ஒன்று சீனா சென்றது. குவாங்சோ துறையில் இறங்கி சீன வணிகர்களுடன் வணிகத்தில் ஈடுபட்டனர்.
லோப்பசு சுவார் ஆல்வெரெங்கா தலைமையில் 19 போர்த்துக்கீசக் கப்பல்கள் இலங்கை வந்தடைந்தன. உள்ளூரில் சிங்களவர் எதிர்ப்புத் தெரிவித்தனராயினும், அவர்கள் கொழும்பில் ஒரு கோட்டையை நிர்மாணித்தனர்.[5]
1519
இந்த பகுதி 1519 இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)