இங்குள்ள மக்கள்தொகை 165,000 ஆகும். தேம்சு ஆறும் செர்வால் ஆறும் இந்நகரத்தினூடே செல்கின்றன. நகர் மையத்திற்கு தெற்கில் இவ்விரு ஆறுகளும் இணைகின்றன. பல்கலைக்கழகத்தை தவிர இங்குள்ள பல கட்டிடங்கள் அவற்றின் கட்டிட வடிவமைப்பிற்காக புகழ் பெற்றவை. இராட்கிளிஃப் கேமரா கட்டிடம் அத்தைகைய ஒன்றாகும். இங்குள்ள பல அருங்காட்சியகங்களும் மற்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.[1][2][3]