ரெபேக்கா அல்லது ரெபேக்காள் (Rebecca / Rebekah; எபிரேயம்: רִבְקָה, தற்காலRivkáதிபேரியம்Riḇqā ISO 259-3: Ribqa, எபிரேயம்: ribhqeh பொருள்: "இணைப்பு", செமித்திய மூலம்: "கட்டுவதற்கு, இணை அல்லது பிணை",[1] "பாதுகாக்க", அல்லது "கண்ணி வைக்க")[2] என்பவர் எபிரேய விவிலியத்தில் ஈசாக்குவின் மனைவியாகவும், யாக்கோபு, ஏசா ஆகியோரின் தாயாகவும் காண்பிக்கப்படுகிறார். ஈசாக்கும் ரெபேக்காவும் பிதாப்பிதாக்களின் குகையில் அடக்கம் செய்யப்பட்ட நான்கு சோடிகளில் ஒன்று என நம்பப்படுகிறது. மற்ற அடக்கம் செய்யப்பட்ட சோடிகளாக ஆதாம்–ஏவாள், ஆபிரகாம்–சாராள், யாக்கோபு–லேயா ஆகியோர் கருதப்படுகின்றனர்.[3]