சாராள் அல்லது சாராய் (/ˈsɛərə/;[1] எபிரேயம்: שָׂרָה, தற்கால Sara திபேரியம் Śārā ISO 259-3 Śarra; இலத்தீன்: Sara; அரபு: سارة Sārah;) இந்தி: सराह Sāraha;) என்பவர் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தையான ஆபிரகாமின் மனைவியும் மற்றும் ஈசாக்குவின் தாயும் ஆவார். மேலும் இவரைப் பற்றி பழைய ஏற்பாடு மற்றும் திருக்குர்ஆன் ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது. இவரது பெயர் முதலில் சராய் என அழைக்கப்பட்டது. பின்னர் ஆதியாகமம் 17:15 கணக்கின்படி, கடவுளின் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக சாராய் என்னும் தனது பெயரை சாராள் என மாற்றினார்.[2]
எபிரேயப் பெயரான சாராள் (שָׂרָה/Sara/Śārā) என்பதற்கு உயர்நிலைப் பெண் எனக் குறிக்கிறது, மற்றும் இளவரசி அல்லது சீமாட்டி என தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.[3]
சாராள் ஆபிரகாமின் மனைவியும் இவரது ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார், மேலும் தேராகு இவரது தந்தை ஆவார்.[4] மற்றும் சாராள் மிக அழகுள்ளவளும் தனது கணவர் ஆபிரகாமைவிட பத்து வயது இளமையானவாளும் ஆவார். மேலும் சாராளுக்கு தொண்ணூறு அகவையும், ஆபிரகாமுக்கு நூறு அகவையில் ஈசாக்கு என்னும் மகன் பிறந்தார். இவர் இவர்களுக்கு முதல் மகனாக இருந்தாலும், ஆபிரகாம் மற்றும் சாராளின் பணிப் பெண்ணான ஆகாருக்கும் பிறந்த இஸ்மவேலும் ஆபிரகாமின் மகனாவார். சாராள் தனது நூற்றுயிருபத்தேழு ஆவது அகவையில் மரித்தார். பின்னர் சாரளின் பிரேதம் கானான் தேசத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையில் அடக்கம் செய்யப்பட்டது.