ஏனோக்கு (Enoch, எபிரேய மொழி:חֲנוֹךְ; அரபு மொழி: إدريس ʼIdrīs) என்பவர் விவிலியத்தின் படி, நோவாவின் தந்தையான மெத்துசேலாவின் தந்தை. இவர் ஆதாமுக்குப் பின், சேத்து வழிவந்த ஏழாம் தலைமுறையை சேர்ந்தவர்.[1] இவரின் தந்தை எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, இவர் பிறந்ததாக விவிலியம் கூறுகின்றது. ஏனோக்கு என்ற பெயருக்கு அர்ப்பணிப்பு என்று பொருள்.
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இவரைப்பற்றிக் குறிக்கையில், "ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான்.[2][3] மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்." (தொடக்க நூல் 5: 20-24)
விவிலியத்தில் இவரைப்பற்றி மிகக் குறுகிய வசனமே காணப்பட்டாலும், பல பழைய ஏற்பாடு ஆர்வளர்களிடையே முக்கியத்துவம் பெறுகின்றார்.
↑65 years according to the Masoretic Text; 165 years according to the Septuagint. Larsson, Gerhard. “The Chronology of the Pentateuch: A Comparison of the MT and LXX.” Journal of Biblical Literature, vol. 102, no. 3, 1983, pp. 402. www.jstor.org/stable/3261014.
↑William Morfill (1896). The Book of the Secrets of Enoch, Chap. 2.