ராயகடா மாவட்டம் (Rayagada)ஒடிசா மாநிலத்தின் தென் பகுதியில் கனிம வளங்கள் நிறந்துள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]அக்டோபர் 2, 1992 முதல் ராயகடா தனி மாவட்டமாக அங்கீகாரம் பெற்றது[2]. இந்த மாவட்டத்தில் பெரும்பகுதி பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். சௌரா இன மக்களுக்கு அடுத்தபடியாக திராவிட மொழி பேசும் கோந்தாஸ் இன மக்கள் இங்கு அதிகம் வாழ்கின்றனர். இங்கு ஒடியா மொழி தவிர சில ஆதிவாசி மொழிகளும் பேசப்படுகின்றன. குறிப்பாக குய், கோந்தா, சௌரா ஆகிய மொழிகள் இந்த மாவட்டத்தில் உள்ளவர்களால் பேசப்படுகின்றன.
கடந்த ஆறு தசாப்தங்களாக ஐ எம் எஃப் ஏ மற்றும் ஜே கே காகித ஆலைகள் ராயகடா மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிபுரிகின்றன.
இங்கு கனிமங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. குறிப்பாக பாக்சைட், சிலிக்கான் ஆகியவை பெருமளவில் கிடைக்கின்றன. அண்மையில் உள்ள புள்ளியியல் படி உலகத்தில் உள்ள பாக்சைட்டு அளவில் 56 விழுக்காடுஇந்தியாவில் உள்ளதாகவும் அதில் 62 விழுக்காடுஒடிசாவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் 84 விழுக்காடு ராயகடாவில் உள்ளது. அதனால் தான் பிர்லா மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய தொழிற்சாலைகள் ராயகடாவில் தொழில் துவங்க விருப்பம் தெரிவிக்கின்றன.
உணவக துறைக்கான இலக்கிடமாக ராயகடா உள்ளது. குறிப்பாக ஜோய்ஹிமஹால், தேஜஸ்வினி, கபிலாஸ் மற்றும் ராஜ் பவன் ஆகியவைகள் உள்ளன.
↑"Rayagada District". www.click2odisha.com. Archived from the original on 5 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 2 December 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
↑As evident by Andhra Historical Journal XXVII edition at page 46
↑The rock inscription of Allahbad inscribed by Mahamantri Harisena provides evidence to this effect.
↑Rayagada District(PDF). Orissa Review(Census Special). December 2010. pp. 175–178. Archived from the original(PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 June 2015. {{cite book}}: Check date values in: |archivedate= (help)