பெரும்பாலான மொழிகள், ஏதாவதொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எல்லாம் ஒரு பொதுமொழியிலிருந்தே தோன்றின. இத்தகைய பொதுமொழிகள் பல இன்று வழக்கிழந்து போய்விட்டன. அவற்றிலிருந்து தோன்றித் தற்போது வழக்கிலுள்ள மொழிகள் மூலமாகவே மேற்படி குடும்பப் பொது மொழிகளின் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது.
மொழிக்குடும்பங்கள், மேலும் பல துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளன. அவை "கிளைகள்" எனப்படுகின்றன. மொழிக்குடும்ப வரலாறு பொதுவாக ஒரு "மர"மாகச் சித்தரிக்கப்படுவதாலேயே மூலத்திலிருந்து பிரிந்தவை கிளைகள் எனப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு கிளையின் பொது மூல மொழி, அவற்றின் "முதல்நிலை மொழி" என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாகத் திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமொழி முதல்நிலைத் திராவிட மொழி எனவும், இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழி முதல்நிலை இந்தோ-ஐரோப்பிய மொழி எனவும் குறிப்பிடப் படுகின்றன.
இயற்கை மொழிகள்
முக்கிய மொழிக் குடும்பங்கள் (குடும்பங்களிடையேயான தொடர்புகளைக் கருதாது, புவியியல் ரீதியில் வகைப்படுத்தப்பட்டவை
இங்கே "புல்லட்" குறிகளுடன் தரப்பட்டுள்ளவை அறியப்பட்ட மொழிக்குடும்பங்களின் பெயர்களாகும். அவற்றின் மேலே தரப்பட்டுள்ள புவியியல் ரீதியான தலைப்புக்கள் புரிந்துகொள்வதற்கு எளிதாக சிறு பகுதிகளாகப் பிரிக்கும் வசதிக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மேற்படி மொழிகளடங்கிய பெருங் குடும்பங்களாகக் கொள்ளப்படக்கூடாது.