ஜெய்பூர் (Jeypore) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த கோராபுட் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். தண்டகாரண்யம் காட்டுப் பகுதியின் கிழக்கு எல்லையின் அமைந்த ஜெய்பூர் நகரத்தின் முப்புறங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அரக்கு மலைகளால் சூழ்ந்தது. ஜெய்பூர் நகரத்தின் மேற்கில் சத்தீஸ்கர் மாநில எல்லை உள்ளது.
ஜெய்பூர் நகரம், ஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேஸ்வரத்திலிருந்து 528 கிமீ தொலைவிலும்; விசாகப்பட்டினத்திலிருந்து 215 கிமீ தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகையியல்
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஜெய்பூர் நகரத்தின் மக்கள் தொகை 84,830 பேர் ஆவர்.[1]
கடல் மட்டத்திலிருந்து 595 மீட்டர் உயரத்தில் அமைந்த ஜெய்பூர் நகரம் 18°51′N82°35′E / 18.85°N 82.58°E / 18.85; 82.58 பாகையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 659 மீட்டர் உயரத்தில் அமைந்த ஜெய்பூர் நகரம், தண்டகாரண்யம் காட்டுப் பகுதியின் கிழக்கு எல்லையில், முப்புறங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அரக்கு மலைகளால் சூழ்ந்தது. ஜெய்பூர் நகரத்தின் மேற்கில் சத்தீஸ்கர் மாநில எல்லை உள்ளது.
கோடைக் காலத்தில் அதிகபட்ச வெப்பம் 45°C ஆகவும்; குளிர்காலத்தில் அதிகபட்ச குளிர் 19°C ஆகவும் கொண்ட இந்நகரத்தில், பருவ மழை குறிப்பிடத்தக்க அளவிலே உள்ளது.