223 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பாதகுடா, கலிஜாய் மலை, பறவைகள் தீவு, கந்தபந்தா, கிருஷ்ணபிரசாத் (பழைய பரிகுடா), நளபானம், நுவாப்பரா, சாலமன் மற்றும் சனகுடா திவுகள்
1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சில்கா ஏரி, உலகின் இத்தகைய உவர் நீர் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும்.[4]
குளிர்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் சில்கா ஏரியில் பெரிய அளவில் வலசை வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு சில்கா ஏரி புகலிடமாக உள்ளது.[5][6]
சில்கா ஏரியின் சூழலியல் மீன் வளத்திற்குப் பெரிதும் ஆதாரமாக விளங்குகிறது. சில்கா ஏரியின் கரையிலும், தீவுகளிலும் மீன்பிடித் தொழிலை நம்பி, 132 கிராமங்களைச் சேர்ந்த 1,50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்கிறார்கள்.[7][8]
சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை எண் 5 சில்கா ஏரியின் கிழக்கு கரையின் வழியாகச் செல்கிறது. ஒடிசாவின் புரி நகரத்திலிருந்து தென்கிழக்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சென்னை – புவனேஸ்வர் – கொல்கத்தா செல்லும் அனைத்து தொடருந்துகளும் சில்கா ஏரி வழியாக நின்று செல்கிறது.
ஒடிசா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சில்கா ஏரியில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்துள்ளது. பல தனியார்ப் படகுகளும் சில்கா ஏரியில் உள்ள தீவுகளைச் சுற்றி காண்பிக்கின்றன.[9]
↑Forest and Environment Department. "Chilika". Wildlife Conservation in Orissa. Govt of Orissa. Archived from the original on 2013-07-01. பார்க்கப்பட்ட நாள் 2008-12-21.