பழங்குடிகள்

அந்தமான் தீவுகளைச் சேர்ந்த பழங்குடிகள் இருவர்

பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தோனேசியா ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடல் பழங்குடிகள்

பல பழங்குடியின் மக்கள், பல இடங்களில் கடலிலேயே வாழ்கிறார்கள். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.[1]

வரைவிலக்கணம்

பழங்குடிகள் என்போர், ஒரே பண்பாட்டுக்கு உரியவர்களாகவும், ஒரே மொழியை அல்லது கிளைமொழியைப் பேசுபவர்களாகவும், பொது வரலாற்றைக் கொண்டவர்கள் என்ற உணர்வு கொண்டவர்களாகவும், மையப்படுத்திய அதிகார அமைப்பு இல்லாதவர்களாகவும் உள்ள ஒரு குழுவினர் எனப் பொருவாக வரையறுக்கப்படுகிறது. இக்குழுக்கள் குலங்களையும் (bands), கால்வழி (lineages) உறவுக் குழுக்களையும் தம்முள் அடக்கியவை.

இதனையும் காண்க

உசாத்துணைகள்

  • பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003.

வெளி இணைப்புகள்

  1. "நாட்டுரிமை இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம்! - வியக்கத்தக்க படங்கள் தினகரன்19 அக்டோபர் 2015". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-20.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!