பாராபங்கி (Barabanki), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், அவத் பிரதேசத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் பாராபங்கி நகரம் உள்ளது. 2011-இல்இந்நகரத்தின் மக்கள் தொகை 1,46,831 ஆகும்.
தேசிய நெடுஞ்சாலை 28 பாராபங்கி மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது. இது அயோத்தி, லக்னோ, கோரக்பூர் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.[4]இந்நகரத்தின் வழியாகச் செல்லும் பிற நெடுஞ்சாலைகள்:
தேசிய நெடுஞ்சாலை எண் 27
தேசிய நெடுஞ்சாலை எண் 727 H (பாராபங்கி-லக்கீம்பூர்
தேசிய நெடுஞ்சாலை எண் 927 (பாராபங்கி-நேபாள்கஞ்ச்
தேசிய நெடுஞ்சாலை எண் 28 (லக்னோ-அயோத்தி-கோரக்பூர்
விரைவுச் சாலைகள்
லக்னோ முதல் காசீப்பூர் மாவட்டம் வழியாகச் செல்லும் 340 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 6 வழித்தட பூர்வாஞ்சல் விரைவுச் சாலை பாராபங்கி நகரம் வழியாகச் செல்கிறது.