2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ஆசம்கர் நகரத்தின் மக்கள் தொகை 1,10,983 ஆகும். அதில் ஆண்கள் 57,878 மற்றும் பெண்கள் 53,105 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13,352 ஆகவுள்ளனர். இதன் சராசரிஎழுத்தறிவு 85.23% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 70.22%, இசுலாமியர் 29.06%, கிறித்தவர்கள் 0.34% மற்றும் பிறர் 0.38% ஆகவுள்ளனர்.[3]