மவூ மாவட்டம் (இந்தி: मऊ ज़िला, உருது: مئو ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. மவூ நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஆசம்கர் கோட்டத்தின் ஒரு பகுதியாகும். இம்மாவட்டம் உத்தரப்பிரதேசத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் எல்லையாக தெற்கில் காசிப்பூர் மாவட்டமும், கிழக்கில் பலியா மவாட்டமும், மேற்கில் ஆசம்கர் மாவட்டமும்,வடக்கில் கோரக்பூரும் அமைந்துள்ளன.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி மவூ மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,205,170.[1] இது தோராயமாக லாத்வியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 206வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,287 inhabitants per square kilometre (3,330/sq mi).[1] மேலும் மவூ மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 18.94%.[1] மவூ மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 978 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் மவூ மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 75.16%.[1]
மேற்கோள்கள்