அயோத்தி மாவட்டம் முன்னர் இதன் பெயர் பைசாபாத் மாவட்டம் என இருந்தது. பைசாபாத் மாவட்டத்தின் பெயரை, அயோத்தி மாவட்டம் என மாற்றப்படுவதாக, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் 6 நவம்பர் 2018 அன்று அறிவித்தார்.[1][2][3][4][5][6][7][8][9]
அயோத்தி கோட்டத்தில் அமைந்த அயோத்தி மாவட்டத்தின் தலைமையகம் சரயு ஆற்றின் கரையில் அமைந்த அயோத்தி மாநகராட்சியில் உள்ளது. இந்த மாவட்டம் 2,522 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் அயோத்தி நகரில் இராமர் பிறந்த இடம் அமைந்துள்ளது. மேலும் பாபர் மசூதி இருந்தது. அயோத்தி மாவட்டத்தின் பெரிய நகரமான பைசாபாத் நகரத்தில் டாக்டர். இராம் மனோகர் லோகிய அவத் பல்கலைகழகம் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது 24,70,996 மக்கள் வாழ்ந்தனர். அதில் ஆண்கள் 12,59,628 மற்றும் பெண்கள் 12,11,368 உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3,60,082 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 68.73% ஆகவுள்ளது. அயோத்தி மாவட்ட மக்கள்தொகையில்இந்துக்கள் 20,94,271 (84.75%), இசுலாமியர்கள் 3,65,806 (14.80%) மற்றும் பிற சமயத்தவர்கள் 0.45% ஆக உள்ளனர்.[10] அயோத்தி மாவட்ட மக்கள் அவதி மொழி, இந்தி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.