லிபரான் ஆணையம்(லிபரான் அயோத்தி விசாரணை ஆணையம்) , பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகத்தால்
அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமாகும்.பாபர் மசூதி இடிக்கபட்ட 10ஆவது நாளில்( 1992 டிசம்பர் 16ஆம் தேதி ) ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிவந்த நீதிபதி எம்.எஸ்.லிபரான் தலைமையில் அமைக்கப்பட்டது.இந்தக்குழுவின் பதவிக்காலம் 48 முறை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற பின்பு விசாரணையை தொடர்ந்த நீதிபதி லிபரான், 17 ஆண்டுகளுக்கு பிறகு , 2009 இல் தனது அறிக்கையை வழங்கினார்.[1]
அறிக்கையின் சாராம்சம்
பாபர் மசூதி இடிப்பில் பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளின் தலைவர்களுக்கு முக்கியப் பங்குண்டு என அந்த அறிக்கை குற்றம் சாட்டியது.[2][3]
உச்சநீதி மன்றத்தில் அளித்த உறுதி மொழிக்கு மாறாக மசூதியை இடிக்க அன்றைக்கு இருந்த கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு அனுமதித்தது என்று அந்தக்குழு குற்றம்சாட்டியது.