இந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்

நுகர்வோர் பாதுகாப்பு

தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாணையம் (நேசனல் கன்சியூமர் டிஸ்பியூட்ஸ் ரிட்ரசல் கமிசன்) என்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986,இன் படி இந்தியாவின் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகள் மற்றும் பூசல்களைகளையவும்,[1] நேர்மையற்ற, மனசாட்சியற்ற வணிக நோக்கர்களிடமிருந்து நுகர்வோர்களை பாதுகாக்கவும் இந்திய அரசால் கட்டமைக்கப்பட்ட ஆணையம் ஆகும்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நுகர்வோரின் துயர்களைத் துடைக்கும் பொருட்டு மற்றும் அதற்கான வடிவமைக்கப்பெற்ற சட்டத்தை அமல்படுத்தும் ஆணையமாக கடந்த சில ஆண்டுகளில் செயல்பட்டுவருகின்றது. இவ்வாணையம் மக்களின் குறைகளை விரைவில் தீர்க்க அணுகும் ஊர்தியாகவும், மக்களை பாதுகாக்கவும் மற்றும் செலவில்லாத குறை தீர்ப்பாணையமாகவும் மக்கள் அணுகும் விதத்தில் செயல்படுகின்றது.

இச்சட்ட அமுலினால் நுகர்வோர் விற்பனையாளர்கள் எச்சரிக்கை என்ற விழிப்புடன் இருக்க தங்களை தீர்மானித்துக் கொள்கின்றனர். இச்சட்ட அமுலுக்கு முன் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கை அல்லது வாங்குபவர்களின் எச்சரிக்கை என்ற நிலையில் நுகர்வோர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.

குறை தீர்வு மன்றம்

இச்சட்டம் வகுத்துள்ள நிபந்தனையின்படி மைய நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் ஒன்றை மைய அரசின் நுகர்வோர் குறை தீர்வு அமைச்சக அமைச்சர் தலைமையிலும்,[1] மாநிலத்தில் மாநில நுகர்வோர் குறை தீர்வு அமைச்சக அமைச்சரின் தலைமையிலும்[1] நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பொருட்டு மன்றம் அமைத்திடல் வேண்டும். அம்மன்றம் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை களைந்திட அல்லது தீர்வு கண்டிட வேண்டும்.

கட்டமைவு

தேசிய நுகர்வோர் ஆணையம் 1988[1] ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டது. இதன் தலைமை பொறுப்பை அமர்வு அல்லது ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏற்றிருப்பார்.

தற்பொழுது தலைமை பொறுப்பை ஏற்றிருப்பவர் நீதியரசர் அசோக் பான். இவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். இவர் தலைவராகவும் அவருடன் கூடிய ஒன்பது பேர் உறுப்பினர்களாகவும்[1] உள்ளனர்.

ஆணையத்தின் ஏற்பாடு

  • இச்சட்டம் வழங்கியுள்ள முன்னேற்பாடுகள் பொருட்கள் அதே நேரத்தில் சேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது.[1]


புகார்

புகார் அளிக்க

புகாரை நுகர்வோர் எழுத்துமூலமாக ஆணையத்திற்கு நேரிடையாகவோ அல்லது நுகர்வோரின் அதிகாரம் பெற்றவர் எவரும் அளிக்கலாம். அவர் வழக்குரைஞராக இருக்கவேண்டும் என்பதில்லை.[1] வழக்குகளையும் (புகார் தாரர்) நுகர்வோரே வழக்காடலாம் அல்லது அதிகாரம் பெற்ற எந்தவோரு நபரும் வழக்காடலாம். மனுதாரருக்கு (நுகர்வோருக்கு) துணை நிற்பவர் (உடன் உறைபவர்) எவரும் இலர் என்பதையுணர்ந்து, அப்புகாரின் நேர்மையைக் கருதி ஆணையமே வழக்குப் பிரதிநிதிகளை நியமிக்கின்றது[1]. இம்முறை மேல்முறையீட்டிலும் பின்பற்றுகின்றது.

புகார் ஏற்கும் முறை

எழுத்து பூர்வமான புகார்களை ஆணையம் நுகர்வோர் பாதுகாப்புத் திருத்தச் சட்டம், 2002,இன் படி பதிவு செய்கின்றது. இதனை படி பொருட்கள் மற்றும் சேவைகளின் ரூபாய் மதிப்பிற்கேற்ப [1] வகைப்படுத்தப்பட்டுள்ளவைகளாவன-;


  • குறிப்பு இதனுள் அடங்கிய பொருள்களின் [1] மற்றும் சேவைகளின்[1] மதிப்புகளை அந்த குறிப்பிட்ட பொருள் சேவை இவைகளின் விலை மதிப்பை குறிப்பதாகும். இதன் பொருளை இலவச சேவைகளுக்கோ, ஒப்பந்த அடிப்படையில் சுய தேவைகளுக்காக ஏற்படுத்துகின்ற பொருளின் மதிப்பைக்குறிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சேவை என்பதற்கு மேற்கூறிய விளக்கத்தை ஒரு சுட்டிக்காட்டுபவையாக[1] எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர எல்லாம் அதனுள் அடங்கியதாக [1] எடுத்துக் கொள்ளக்கூடாது.

கட்டணம் கிடையாது

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மிகவும் மலிவான மாற்று இன்னல் நீக்கும் வழியாக நுகர்வோருக்கு ஏற்கனவே ஏற்பட்ட இன்னல்களை நீக்குவனவாக உரிமையியல் தீர்வின் மூலம் அவர் துயர்களை துடைக்கின்றது. புகார் / மேல் முறையீடு / மனு தாக்கல் செய்வதற்காக இச்சட்டம் வகுத்துள்ளபடி அவர்களிடம் (நுகர்வோரிடம்) எந்தவித கட்டணமோ, செயல் கட்டணமோ வசூலிப்பது கிடையாது.[1]

காலவிரயமின்றி

இதன் சட்டமுறைமைகள், எளிமையானதாகவும், சுருக்கமானதாகவும் இருப்பதாலும், இதன் பெருமுயற்சி தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டிருப்பதால் இதன் வழக்குகள் வெகு விரைவில் தீர்வு காணப்படுகின்றன, வெகு விரவில் முடிக்கப்படுகின்றன.[1]

மேல்முறையீடு

நுகர்வோருக்கு மாவட்ட ஆயத்தின் தீர்வு திருப்தியளிக்கவில்லையென்றால் மேல்முறையீட்டுக்கு மாநில ஆணையத்தை அணுகலாம் அதிலும் திருப்தியளிக்கவில்லையென்றால் தேசிய ஆணையத்தை அணுகலாம்.[1]

தேசிய ஆணையம் அமைந்துள்ள இடம்

தேசிய ஆணையத்தின் பதிவு அலுவலகாமக புது தில்லி, ஜன்பத், உள்ள ஜன்பத் பவனில் பி பிரிவு (பி விங்) 7 வது தளத்தில் [1] அமைந்துள்ளது. ஆணையம் சனி, ஞாயிறு மற்றும் மைய அரசு விடுமுறை நாட்களைத் தவிர, அனைத்து நாட்களிலும் திங்கள் முதல் வெள்ளிவரை காலை 10 மணி முதல் 5 மணி வரை இயங்கும். ஆணையத்தை தொலைபேசி மூலம் அணுகுவதற்கு ஏதுவாக கீழ்கண்ட எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 011-23712109, 23712459, 23389248. தொலை நகல் 23712456.[1] ஆணையங்கள் நுகர்வோரின் நண்பனாக மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய ஆணையங்கள் செயல்படுகின்றன.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!