ஜேம்ஸ்டவுன் என்பது தெற்கு அத்திலாந்திக் சமுத்திரத்தில் அமைந்துள்ள செயின்ட் எலினா தீவின் தலைநகரமும் வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமும் செயின்ட் ஹெலனா பிரித்தானிய ஆட்புலனினது தலைநகரமும் ஆகும். தீவின் வடமேற்குக் கடற்கரையோரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. தீவிற்குக் கொண்டுவரப்படும் பொருட்கள் இறக்கப்படுவதற்காக இந்நகரிலேயே ஓர் துறைமுகம் அமைந்துள்ளது. செயின்ட் எலினா தீவின் வீதி மற்றும் தொடர்பாடல் வலையமைப்புக்களின் மத்திய நிலையமும் இந்நகரமேயாகும். 1659 ஆம் ஆண்டில் பிரித்தானியக் காலனித்துவ வாதிகளினால் நிறுவப்பட்டதாகும்;பேர்முடாவை அடுத்து பிரித்தானிய ஆட்சிப் பிராந்தியங்களில் இரண்டாவது பண்டைய ஆட்சிப் பிராந்தியம் செயின்ட் எலினாவே ஆகும்.
சனத்தொகை
2008 ஆண்டின் ஜேம்ஸ்டவுனின் சனத்தொகை 716 ஆகும். எனினும் 1998 ஆம் ஆண்டில் ஜேம்ஸ்டவுனின் சனத்தொகை 998 ஆகக் காணப்பட்டது. நாட்கணக்கில் இந்நகரின் சனத்தொகை குறைவடைந்து வருகின்றது.[2] இந்நகரம் செயின்ட் எலினா தீவின் பாரிய குடியேற்றமன்று - எனினும் இந்நகரின் புறநகர்களான ஹாஃப் ட்ரீ ஹொலோ மற்றும் செயுன்ட் பவுலாஸ் ஆகியவை ஜேம்ஸ்டவுனிலும் பார்க்க சனத்தொகை கூடியவையாகும்.
"St Helena - Jamestown". Archived from the original on ஜூன் 4, 2011. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 8, 2016. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)