யூபா (Juba, /ˈdʒuːbə/)[1], ஜூபா, அரபி: جوبا என்பது தெற்கு சூடான் குடியரசின் தலைநகரமும், அந்நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு சூடானின் பத்து மாநிலங்களில் ஒன்றான மத்திய எக்குவட்டோரியாவின் தலைநகரமும் ஆகும். வெள்ளை நைல் நதியில் அமைந்துள்ள இந்நகரம் ஜூபா கவுன்டியின் மாநகராட்சியாகவும் உள்ளது.