லோமே (ஆங்கிலம்: Lomé), டோகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்டொகை 837,437[1] ஆகும். கினி வளைகுடாவில் அமைந்துள்ள இந்நகரம், நாட்டின் நிர்வாக, கைத்தொழில் மையமாகவும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. கோப்பி, கொக்கோ, கொப்பரை போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் உள்ளது.