புவத்தியேயின் முழுக் குடும்பமும் அன்று பிரித்தானியக் குடியேற்ற நாடாக இருந்த பகாமாசில் வசித்து வந்தது. ஆனாலும், அவரது குடும்பம் மயாமிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்கு சிட்னி பிறந்தார். இதனால் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமையும் கிடைத்தது. பகாமாசில் வசித்து வந்த சிட்னி தனது 15-வது அகவையில் மயாமிக்குக் குடிபெயர்ந்து, பின்னர் ஓராண்டில் நியூயார்க்கு நகரம் சென்றார். அங்கு அவர் அமெரிக்க நீக்ரோ அரங்கில் இணைந்து, 1955 இல் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படமான பிளாக்போர்டு ஜங்கிளில் உயர்-வகுப்பு மாணவனாக நடித்தார். 1958 ஆம் ஆண்டில், ஒன்பது அகாதமி விருது பரிந்துரைகளைப் பெற்ற தி டிஃபையன்ட் ஒன்சு திரைப்படத்தில் டோனி கர்ட்டிசுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்ட குற்றவாளிகளாக புவத்தியே நடித்தார். இரு நடிகர்களும் சிறந்த நடிகருக்கான பரிந்துரையைப் பெற்றனர். ஒரு கறுப்பின நடிகருக்கான முதல் நபராக புவத்தியே பரிந்துரைக்கப்பட்டார். அதே போல் பாஃப்டா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு விருதும் பெற்றார். 1964 ஆம் ஆண்டில், லில்லிஸ் ஆஃப் தி ஃபீல்டு படத்தி இடாய்ச்சு மொழி பேசும் கன்னித்துறவிகளின் குழுவிற்கு தேவாலயத்தைக் கட்ட உதவும் கைவினைஞராக நடித்தமைக்காக[4] (1963) சிறந்த நடிகருக்கான அகாதமி விருது, மற்றும் கோல்டன் குளோப் விருது ஆகியவற்றை வென்றார்.[5]