ஜெர்மி ஜான் அயர்ன்சு 19 செப்டம்பர் 1948 (1948-09-19) (அகவை 76) காவ்ஸ், வைட்டுத் தீவு, இங்கிலாந்து
பணி
நடிகர்
செயற்பாட்டுக் காலம்
1969–இன்று வரை
வாழ்க்கைத் துணை
ஜூலி ஹாலம் (தி. 1969; ம.மு. 1969)
சினேட் குசாக் (தி. 1978)
பிள்ளைகள்
2
ஜெர்மி ஜான் அயர்ன்சு (ஆங்கில மொழி: Jeremy John Irons) (பிறப்பு: 19 செப்டம்பர் 1948) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் பிரிஸ்டல் ஓல்ட் விக் தியேட்டர் பள்ளியில் கிளாசிக்கல் பயிற்சி பெற்ற பிறகு, தனது நடிப்பு வாழ்க்கையை 1969 இல் மேடைநாடகங்கள் மூலம் தொடங்கினார். அதை தொடர்ந்து 1984 இல் ஒரு நாடகத்தில் சிறந்த நடிகருக்கான டோனி விருதைப் பெற்றார்.
2015 இல் ஐயன்ஸ் எலிசபெத் I என்ற வரலாற்று குறுந்தொடர்களில் தோன்றினார், அதற்காக கோல்டன் குளோப் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதைப் பெற்றார். 2011 முதல் 2013 வரை, ஷோடைம் வரலாற்றுத் தொடரான 'தி போர்கியாஸ்' என்ற தொடரிலும் போப் அலெக்சாண்டர் VI ஆகவும் நடித்தார். இவர் 2019 இல் எச்பிஓவின் 'வாட்ச்மேன்'[6] என்ற தொலைக்காட்சி தொடரில் அட்ரியன் வெய்ட்/ஓசிமாண்டியாஸ் ஆக தோன்றினார். இவர் தனது நடிப்புத்திறன் மூலம் திரைப்படத்திற்காக அகாதமி விருதையும், தொலைக்காட்சிக்காக எம்மி விருதையும், நாடகத்துறைக்காக டோனி விருதையும் வென்ற அமெரிக்காவில் "நடிப்பின் மும்மடங்கு" பெற்ற சில நடிகர்களில் இவரும் ஒருவர் ஆனார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
அயர்ன்சு 19 செப்டம்பர் 1948 இல் வைட்டுத் தீவுல் உள்ள கோவ்ஸில் ஒரு கணக்காளரான பால் டுகன் அயர்ன்சு மற்றும் பார்பரா ஆனி ப்ரெரட்டன் பிரைமர் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு கிறிஸ்டோபர் (பிறப்பு 1943) என்ற ஒரு சகோதரரும் மற்றும் ஃபெலிசிட்டி அன்னே (பிறப்பு 1944) என்ற ஒரு ஒரு சகோதரியும் உண்டு. இவர் 1962 முதல் 1966 வரை டோர்செட்டில் உள்ள சுயாதீன ஷெர்போர்ன் பள்ளியில் கல்வி பயின்றார். நான்கு பேர் கொண்ட பள்ளி இசைக்குழுவின் '4 பில்லர்ஸ் ஆப் விஸ்டம்' என்ற இசைக்குழுவில் டிரம்மர் மற்றும் ஹார்மோனிகா வாசிப்பாளராக இருந்தார்.
↑1. Brideshead Revisited (1981, ITV). In: "The 22 greatest TV adaptations". The Telegraph. Retrieved 20 May 2016. (Originally published in January 2015 as "The 20 greatest TV adaptations".)