2017 இல் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் வெளியிட்ட ஜஸ்டிஸ் லீக், கடினமான தயாரிப்பைச் சந்தித்தது. அதன் திரைக்கதையில் 2016 மற்றும் 2017 க்கு இடையில் தயாரிப்பிற்கு முன்னும் பின்னும் பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டது. மே 2017 இல் சாக் சினைடர் தனது மகள் இறந்ததைத் தொடர்ந்து தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் இருந்து விலகினார், மேலும் ஜோஸ் வேடன்[2] படத்தை முடிக்க ஒரு அங்கீகாரம் பெறாத இயக்குனராக பணியமர்த்தப்பட்டார். பின்னர் இவர் சில மாற்றங்கள் மற்றும் சில காட்சிகளை மீண்டும் உருவாக்கினார். அத்துடன் அதிக நகைச்சுவை காட்சிகளையும் இணைந்தார். மேலும் வார்னர் புரோஸ். இன் உத்தரவுக்கு இணங்க இயக்க நேரத்தை கணிசமாக குறைக்கப்பட்டது. இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று மற்றும் வசூல் ரீதியாக ஏமாற்றத்தை அளித்தது, இதனால்வார்னர் பிரதர்ஸ் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் எதிர்காலத்தை மறுமதிப்பீடு செய்ய வழிவகுத்தது, மேலும் பகிரப்பட்ட கதையை குறைவாகக் கருத்தில் கொண்டு தனிப்பட்ட கதாபாத்திரங்களைச் சுற்றி திரைப்படங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது.
பல ரசிகர்கள் சினைடரின் உருவாக்கத்தில் இருந்த ஜஸ்டிஸ் லீக் என்ற படத்தை பார்வையிட விருப்பம் தெரிவித்தனர், அவர்களும் நடிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்களும் "ஸ்னைடர் கட்" என்று செல்லப்பெயர் சூட்டினர்.[3][4] இது திரையரங்குகளில் வெளியிட சாத்தியமில்லை என்று தொழில்துறையினர் கருதினர். இருப்பினும் வார்னர் பிரதர்ஸ் பிப்ரவரி 2020 இல் மே மாதம் எச்பிஓ மாக்சு என்ற ஓடிடி தளத்தில் சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விசுவல் எஃபெக்ட்சு, இசை மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றை அக்டோபர் 2020 இல் படமாக்கி முடிக்க சுமார் $70 மில்லியன் செலவானது.[5] இதன் வெளியீடு முதலில் ஆறு-அத்தியாய குறுந்தொடராகவும், நான்கு மணி நேரத் திரைப்படமாகவும் திட்டமிடப்பட்டது, ஆனால் குறுந்தொடரின் கருத்து சனவரி 2021 இல் கைவிடப்பட்டது, அதற்குப் பதிலாக முழுவதுமாக ஒரு படமாக இறுதி செய்யப்பட்டது. சினைடரின் மகளின் நினைவாக இந்தப் படம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் மார்ச்சு 18, 2021 அன்று அமெரிக்காவில் எச்பிஓ மாக்சில் வெளியிடப்பட்டது. அந்த ஆண்டில் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நான்காவது திரைப்படம் இதுவாகும். பல விமர்சகர்கள் இவரின் இயக்கம், அதிரடி காட்சிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாத்திர மேம்பாடு ஆகியவற்றிற்காக பாராட்டி, 2017 ஆம் ஆண்டு வெளியான ஜஸ்டிஸ் லீக் என்ற படத்தை விட இது சிறந்ததாகக் கருதினர், அதே நேரத்தில் 4 மணிநேர நீளம் விமர்சிக்கப்பட்டது.