1996 ஆம் ஆண்டில் இத்திரைப்படத்தினை உறுவாக்க முயற்சி துவங்கியது. இவான் ரியட்மேன் ஆல் தயாரித்து இயக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக திரைப்படத்தின் தயாரிப்பு நிலுவையில் இருந்தது. வார்னர் புரோசால் 2010 ஆம் ஆண்டில் திரைப்படத் தயாரிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இயக்குநர் ஜென்கின்சு 2015 இல் திரைப்படத்தினை இயக்க கொண்டுவரப்பட்டார். நவம்பர் 21, 2015 அன்று படப்பிடிப்பு துவங்கியது. ஐக்கிய அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராச்சியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மே 6, 2016 அன்று படப்பிடிப்பு முடிந்தது. கூடுதல் படப்பிடிப்பு நவம்பர் 2016 இல் நடந்தது.
வொண்டர் வுமன் படம் மே 15, 2017 அன்று சாங்காய் இல் வெளியானது. ஐக்கிய அமெரிக்காவில் சூன் 2, 2017 அன்று வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இத்திரைப்படம் நல்ல வருவாயினையும் ஈட்டியது.[3][4] இத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக வொண்டர் வுமன் 1984 என்ற படம் சூன் 5, 2020 அன்று வெளியானது.