முத்தேவியர்
உபவேதங்கள்
வேதாங்கங்கள்
பதினெண் புராணங்கள்
இதிகாசங்கள்
தமிழ் இலக்கியம்
மற்றவை
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல்
பொதுவாக இந்து சமயம் எனப்படும் தொன்று தொட்டு வரும் சமயத்தில் உள்ள பற்பல பிரிவுகள் உண்டு. ஆதி சங்கரர் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தொகுத்தவையாகக் கொள்ளப்படும் ஆறு உட்பிரிவுகள் சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுளர்களை அவ்வவ் பிரிவிற்குத் தலையாய முழுமுதற் கடவுளாகக் கொண்டவை. ஸ்மார்த்தம் என்பது ஆறு கடவுளரையும் வணங்கும் பிரிவு.[1] இந்த ஆறு பிரிவுகளுக்கும் பல பிரிவுகள், உட்பிரிவுகள் மற்றும் தத்துவங்கள் உள்ளன. தமிழ் மரபிலும், பிற இந்தியப் பழங்குடிகளின் மரபிலும் பற்பல வேறுபாடுகள் உண்டு. 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பெரும்பாலான பெரிய பிரிவுகள் சைவம் மற்றும் வைணவத்தில் இணைந்தன. தொல்காப்பியத்தின்படி, 5 நிலங்களில் 5 பெரும் கடவுள்கள் உள்ளன.
ஆசீவகம், சமணம், பௌத்தம் போன்ற சமயங்கள் மற்றும் சீக்கியம், அய்யாவழி, ஆரிய சமாஜ் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் அனைத்து தெற்காசிய நாட்டுப்புற மரபு மதங்களும் இந்து மதமாக கருதப்படுகின்றன.[2]
சங்கரரது காலத்தில் இம் மதங்களிடையே போட்டி பொறாமைகள் இருந்தன இவற்றை சீர் செய்து ஒவ்வொரு மதத்திற்குமான ஆகமங்கள் பிராமண நூல்கள் என்பவற்றை வகுத்து இம் மதங்களின் முழுமுதற் கடவுள்களிடையே உறவு முறைகளை நிலை நாட்டி சண்மதங்களை மீள் ஸ்தாபனம் செய்தவர் ஆதி சங்கரர் ஆவார். இம் மதங்கள் இன்று வரை செல்வாக்குடனும் , சிறப்புடனும் விளங்குகின்றது.[3]
கௌமாரம் மற்றும் கணாபத்தியம் ஆகியவை சைவ மதத்தின் துணைப்பிரிவாகக் கருதப்படுகின்றன.
இந்த பிரிவுகளில் இருக்கும் ஒற்றுமைகள் அல்லது வேற்றுமைகள் கீழுள்ள கருத்துக்களில் பார்க்கலாம்: