செயலாட்சியர்:
நாடாளுமன்றம்:
சட்டம்:
தேசியக் கூட்டணி:
இந்தியத் தலைமை நீதிபதி (Chief Justice of India) என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் மிக உயர்ந்த நீதிபதிப் பதவியாகும். உயர்ந்த நீதிபரிபாலணம் கொண்ட பதவியும் ஆகும். தற்போதைய இந்தியத் தலைமை நீதிபதியாக நீதியரசர் சஞ்சீவ் கண்ணா என்பவர் நவம்பர் 11, 2024 முதல் பதவியில் உள்ளார். இவர் இப்பதவியை வகிக்கும் 51 ஆவது தலைமை நீதிபதியாவார்.[5]
தலைமை நீதிபதி பணி உச்ச நீதிமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும் அல்லாமல் அதன் அமர்வுகளில் பங்கேற்று நீதிபரிபாலணத்தை நிலைநிறுத்தும் கடமையையும் உள்ளடக்கியதாகும்.[6]
நிர்வாக முறையில் தலைமை நீதிபதியால் நிறைவேற்றப்படும் கடமைகள்.
வழக்குகளை தரம் பிரித்து அதன் தன்மைகளுக்கு ஏற்ப அமர்வுகளை தலைமை நீதிபதி தீர்மானிக்கின்றார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உச்சநீதிமன்றத்தின் விதி 145, 1966இன் படி அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரமாகும். இந்த அதிகாரத்தின்படி இதர நீதிபதிகளின் அமர்வு மற்றும் பணிகளை நிர்ணயிக்க அவருக்கு உரிமையளிக்கின்றது.
இந்திய அரசியலமைப்பு விதி 124 ல் குறிப்பிட்டுள்ளபடி நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படியே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் நியமனம் செய்யப்படுகின்றார். அதைத்தவிர தனியான விதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கென தனியான விதிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதனால் நீதிபதிகள் நியமனங்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட (பல மூத்த நீதிபதிகளினிடையே) இந்திய அரசின் சார்பில் முன்மொழியப்பட்டு குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.
இதன் காரணமாகவே பல நேரங்களில் விதிகளுக்கு முரணாக மூத்த நீதிபதிகள் பலர் இருக்கும் தருணத்தில் அவர்களைவிட இளையவர்களான நீதிபதிகளுக்கு பணி நியமனம் செய்ய இந்திய அரசால் முன்மொழியப்பட்டு நியமனம் செய்யப்படுகின்றனர். தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எ என் ராய் தனக்கு முன் உள்ள மூன்று நீதிபதிகளை பின் தள்ளும் விதமாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசால் முன்மொழியப்பட்டு நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனம் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. அவசர கால பிரகடனத்துக்கு ஆதரவு அளிக்கவே இந்திரா காந்தியால் இந்த முரண்பாடான நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக இராஜ் நாராயண் (ஜனதா கட்சி) என்பவரால் விமர்சிக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் நாட்டின் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று 2010 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.[7]
நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு நீதிபதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமை அல்ல; அது அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு— 2010 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு
நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு நீதிபதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமை அல்ல; அது அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர்அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று தீர்ப்பளித்து, தில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. 5 நீதிபதிகளில், தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். இரண்டு நீதிபதிகள் வேறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர்.[8]
இந்திய அரசியலமைப்பு, இந்திய நாடாளுமன்றத்திற்கு தலைமை நீதிபதியின் ஊதியம் மற்றும் தலைமை நீதிபதியின் பிற சேவை நிபந்தனைகளை தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இதன்படி, இத்தகைய விதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம், 1958-ல் வகுக்கப்பட்டுள்ளன.[6] ஆறாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, 2006-2008-ல் திருத்தப்பட்ட ஊதியம்[9] மீண்டும் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி சனவரி 2016-ல் மாற்றியமைக்கப்பட்டது.[10]