ஜேம்சு மெயிட்லண்ட் ஸ்டுவர்ட் (James Maitland Stewart, மே 20, 1908 - சூலை 2, 1997) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகரும், படைத்துறை அதிகாரியும் ஆவார். இவர் சிறந்த நடிகருக்கான அகாதமி விருதிற்காக ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 1940இல் வெளியான தி பிலடெல்பியா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்காக அகாதமி விருதை வென்றுள்ளார். 1985இல் வாழ்நாள் சாதனையாளருக்கான அகாதமி விருதையும் பெற்றுள்ளார். இவர் இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர் ஆகியவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.[2]
1999இல் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் (AFI) சிறந்த ஆண் நடிகர் பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்தார்.[3]